அது 1995 காலகட்டம். குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. முதன்முதலாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருந்தது. இரு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வந்தது. எல்லோரும் ஆயத்தப்பணிகளில் தீவிரமாக இருந்தார்கள். திரு. மோடி தனக்கு நம்பகமான, கட்சி சாராத ஆட்களை கூப்பிட்டு ஒரு சிறிய கருவியை கொடுத்தார். வெளிநாடு சென்ற போது அவர் அந்த கருவியை வாங்கி வந்திருந்தார். அதை யாருமே அதுவரை கண்டதில்லை. அதன்பெயர் டிஜிட்டல் கேமரா. கட்சிக்காரர்களுடன் சென்று நடக்கும் வேலைகளையும், மக்கள் மற்றும் மக்களின் உணர்வுகள், பழக்க வழக்கங்கள், உடைகள், கூட்டத்தின் அளவு ஆகியவற்றை படம்பிடிப்பதுதான் அவர்களுக்கு இடப்பட்ட பணி. இதன்மூலம் குஜராத்தின் அடிப்படையை தெரிந்துகொள்ள விரும்பினார். இந்தியாவை விடுங்கள், மேலைநாடுகளில் டிஜிட்டல் கேமரா புகழடைவதற்கு முன்பாகவே இந்த அதிசயம் நிகழ்ந்தது.
நவீன தொழில்நுட்பங்களை எல்லோருக்கும் முன்பாகவே பயன்படுத்துவதை ஒரு பழக்கமாகவே திரு. மோடி வைத்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, அரசு நிர்வாகத்திலும் அதை பயன்படுத்துவதை மோடி பெரிதும் விரும்புகிறார். அரசியலில் மட்டுமல்ல, பொது சமூகத்தில் கூட சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை முதன்முதலில் உணர்ந்தவராக மோடியே திகழ்கிறார். ஒருவழி ஊடகமாக இல்லாமல், சமூகவலைத்தளங்கள் இருவழி ஊடகம் என்பதை உணர்ந்திருக்கிறார். குஜராத்தின் முதல்வராக இருந்தபோது சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள் அவரை உடனடியாக தொடர்புகொள்ள முடியும்.
பிரதமராக பதவியேற்றபின் அவரது முதல் முன்னெடுப்புகளில் ஒன்றாக ஜூலை 2014 துவங்கப்பட்ட ‘எனது அரசு’ திட்டம் இருந்தது. ஒரு ஆண்டு கழித்து அரசின் நிர்வாகம் வெளிப்படைதன்மையுடனும், எதிர்வினை ஆற்ற வல்லதாகவும், பொறுப்புடையதாகவும் இருக்க முக்கியக் காரணியான டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார். கலிஃபோர்னியா சான் ஜோஸ் நகரில் நடந்த டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் பேசும்போது, “சமூக வலைத்தளங்கள் மற்றும் சேவைகள் வளர்ந்துவரும் வேகத்தையும் பார்க்கும்போது நம்பிக்கையை தொலைத்து வழிதவறி நிற்பவர்களின் வாழ்க்கையையும் அதே வேகத்தில் மாற்ற முடியும் என்பதையும் நம்பவேண்டும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் டிஜிட்டல் இந்தியா பிறந்தது. இந்தியாவின் வளர்ச்சி மனித வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு வேகமெடுப்பதற்காகத்தான் டிஜிட்டல் இந்தியா துவக்கப்பட்டது. பலவீனமானவர்களின் வாழ்க்கையை சரி செய்யமட்டுமல்ல, ஏழைகள், எட்டா தூரத்தில் இருப்பவர்கள் என எல்லோருடைய வாழ்க்கையை மாற்றவும்தான்,” என தெரிவித்தார்.