உணர்வுபூர்வமான எழுத்தாளர், கவிஞர், கலாச்சார நேயர். நரேந்திர மோடியைப் பற்றிச் வேறுவழிகளில் சித்தரிக்க இதைப் போன்ற வேறு சிலவும் உள்ளன. வேலையிலேயே ஆழ்ந்திருக்க வேண்டியிருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் மூச்சுத்திணறும்படியான வேலைகள் இருந்தபோதிலும், யோகா, எழுத்து, சமூக ஊடகங்களில் மக்களுடன் கலந்துரையாடுவது என தான் ஆழ்ந்து ரசிப்பவற்றில் ஈடுபடுவதற்கு நரேந்திர மோடி சிறிதளவு நேரத்தை ஒதுக்கவே செய்கிறார். பேரணிகளுக்கு இடையேயும் அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி டிவிட்டரில் பகிர்ந்து கொள்வதையும் நீங்கள் பார்க்கலாம். இளம் வயதிலிருந்தே அவர் எழுதிக் கொண்டிருக்கிறார். 24 மணி நேரமும் உடனடிச் செய்திகளை வெளியிட்டு வரும் இந்தக் காலத்தில் பெரும்பாலும் கண்ணுக்குத் தென்படாமல் போய்விடும் நரேந்திர மோடி குறித்த விஷயத்தை நோக்கி இந்தப் பகுதி உங்களை அழைத்துச் செல்கிறது

“யோகா மனிதகுலத்திற்கு இந்தியா வழங்கிய கொடை. இதன் மூலம் உலகம் முழுவதையுமே நம்மால் நெருங்கிவிட முடியும். யோகா என்பது நோய்களிலிருந்து மட்டுமல்ல; ஆசைகளிலிருந்தும் விடுதலை செய்வதாகும்”
அவருக்கு மிகவும் நெருக்கமான விஷயமான யோகாவைப் பற்றி நரேந்திர மோடி வழங்கிய மிகச் சிறந்த உரைகளில் ஒன்று
 
அவரது பேச்சைப் போலவே அவரது நூல்களும் வலுவானவையாக, உள்ளுணர்வைத் தூண்டுவதாக, தகவல்களை தெரிவிப்பதாகவே இருக்கின்றன. நரேந்திர மோடியின் ஒவ்வொரு நூலுமே தகவல், செறிவான கருத்துக்கள், வாழ்வில் அவர் கடந்து வந்த சம்பவங்களைப் பற்றிய விவரிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகத் திகழ்கின்றன
அவசரநிலையின் இருண்ட நாட்களில் குஜராத் பற்றிய காட்சியைப் பாருங்கள். சமூக சமத்துவம் குறித்த அவரது கருத்தைப் படியுங்கள். எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான உலகத்தை விட்டுச் செல்வது எவ்வளவு முக்கியமானது என அவர் நினைப்பது ஏன் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்…
 
“எனது 36 வயதில் ஜகத்ஜனனி தாயுடன் நான் நடத்திய உரையாடல்களின் தொகுப்பே சாக்க்ஷிபாவ் நூலாகும். அது வாசகருடன் என்னை தொடர்புபடுத்துகிறது. பத்திரிக்கைகளின் மூலமாக மட்டுமல்ல; எனது வார்த்தைகளின் மூலமாகவும் வாசகர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது”
உங்களுக்குத் தெரியுமா? நரேந்திர மோடி நாட்குறிப்பு எழுதும் பழக்கமுள்ளவர். என்றாலும் ஒவ்வொரு 6-8 மாத காலத்திலும் எழுதிய பக்கங்களை எரித்து விடும் பழக்கமும் அவருக்குண்டு. ஒருநாள் அவ்வாறு பக்கங்களை எரித்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் அதைப் பார்த்துவிட்டு அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் பக்கங்கள்தான் 36 வயதான நரேந்திர மோடியின் எண்ணங்களின் தொகுப்பாக, சாக்க்ஷிபாவ் என்ற வடிவத்தில் வெளியாயின
 
“உரைநடையின் மூலம் விளக்கமுடியாதவற்றை பெரும்பாலும் கவிதைகளின் மூலமாக வெளிப்படுத்தி விடலாம்…”
நரேந்திர மோடியின் கவிதைகளில் சிலவற்றை இங்கே பார்க்கிறீர்கள். குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகள் இயற்கை எனும் அன்னை, தேசபக்தி ஆகிய கருத்துகளை தெரிவிப்பதாக அமைந்தவை
 
“கலை, இசை, இலக்கியம் ஆகியவை அரசை நம்பியிருக்கக் கூடாது. அவற்றிற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கலாகாது. அரசு இத்தகைய திறமைகளை அங்கீகரித்து, அதை வளர்க்க வேண்டும்”
வெகுஜன கலாச்சாரம் பற்றிய நரேந்திர மோடியின் நம்பிக்கை குறித்து தெரிவிப்பதாக இவை அமைகின்றன. அவசர நிலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்ட அவருக்கு கருத்துச் சுதந்திரம் என்பது நம்பிக்கையின் வடிவமாகவே உள்ளது. அதை அவர் எழுத்திலும் நடைமுறையிலும் பின்பற்றி வருகிறார். பிரபலமான கலைஞர்களுடன் அவர் கலந்துரையாடுவதை நீங்கள் ரசிக்கலாம்
இலையுதிர் காலத்தின் மடியிலிருந்தே வசந்தம் பிறக்கிறது!

திரு. நரேந்திர மோடி எழுதிய அழகான கவிதையை பார்த்திவ் கோஹில் பாடுகிறார்
 
நவராத்திரியின் வண்ணங்களையும் செயலூக்கத்தையும் அழகான கவிதையின் மூலம் பாராட்டுகிறார்
நவராத்திரி விழாவைப் பற்றி திரு. நரேந்திர மோடி எழுதிய கவிதை