மகன் மகள் அனைவரும் சமம் என்பது நமது மந்திரமாக இருக்க வேண்டும்

பெண் குழந்தை பிறப்பதை நாம் கொண்டாடுவோம். நமது மகள்கள் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். உங்களுக்கு மகள் பிறந்தால், அந்த தருணத்தைக் கொண்டாட ஐந்து மரக்கன்றுகளை நட உங்களை வலியுறுத்துகிறேன்.

தாம் தத்தெடுத்த ஜெயபூர் கிராம குடிமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கூறுவது.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (BBBP) என்ற திட்டத்தை ரியானா மாநிலம் பானிப்பட்டில் பிரதமர்  22 ஜனவரி 2015-ல் தொடங்கி வைத்தார். குறைந்து வரும் குழந்தைகள் பாலின விகிதத்தை (CSR)சரி செய்யவும், வாழ்க்கை சக்கரத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கும் BBBP தீர்வு காண்கிறது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம் & குடும்ப நலத் துறை மற்றும் மனிவள மேம்பாடு என மூன்று அமைச்சகங்களின் முயற்சி அது.

PC & PNDT சட்ட அமலாக்கம், தேசிய அளவிலான விழிப்புணர்வு மற்றும் முன்னெடுத்தல் பிரச்சாரம் மற்றும் முதலாவது கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் (CSR குறைவானவை) பல-துறை செயல்பாடு ஆகியவை இத் திட்டத்தின் முக்கியமான அம்சங்களில் அடங்கும். பயிற்சி, உணரச் செய்தல், விழிப்புணர்வை அதிகரித்தல், சமூகத்தை ஒன்று திரட்டுதல் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

பெண் குழந்தைகளை நமது சமூகம் பார்க்கும் முறையை மாற்றி அமைப்பதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சி செய்து வருகிறது. `பெண் குழந்தையுடன் செல்பி' என்ற சிந்தனையை ஆரம்பித்து வைத்த  ரியானா மாநிலம் பிபிப்பூர் கிராம அலுவலரை பிரதமர் மோடி தனது மன் கீ பாத் உரையில் பாராட்டினார். தங்கள் மகளுடன் எடுத்த செல்பியை பகிர்ந்து கொள்ளுமாறும் மக்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். உலக அளவில் அது பிரபலமானது. இந்தியா முழுவதிலும் இருந்தும், உலகெங்கிலும் இருந்தும் மக்கள் தங்கள் மகள்களுடன் எடுத்துக் கொண்ட செல்பியை பகிர்ந்து கொண்டனர். மகள்கள் உள்ள அனைவருக்கும் இது பெருமைக்குரிய தருணமாக மாறியது.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் பல-துறைகளைக் கொண்ட மாவட்ட செயல் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. திறன் உருவாக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவிலான அதிகாரிகள் மற்றும் முதல்நிலை ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைத்து மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினருக்கு ஏப்ரல் - அக்டோபர் 2015-ல் இருந்து ஒன்பது ஜோடி பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

சில உள்ளூர் முயற்சிகள்

 

பித்தோரகர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு கல்வி அளிக்கவும் மகளை பாதுகாப்போம், மகளுக்கு கல்வி தருவோம் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பணிக் குழு மற்றும் வட்டார பணிக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் கூட்டங்கள் நடத்தப்பட்டன & குழந்தைகள் பாலின விகிதம் பற்றி தெளிவான பாதைகள் வகுக்கப்பட்டன. திட்டம் பற்றி பரவலான தகவல்கள் மக்களை அடைவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பல்வேறு பள்ளிக்கூடங்கள், ராணுவப் பள்ளிகள், அரசுத் துறைகளின் அலுவலர்கள் உள்ளிட்டோரின் முக்கிய பங்கேற்புடன் நிறைய பேரணிகள் நடத்தப்பட்டன. 

பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் பற்றி விழிப்புணர்வை அதிகரிக்க, பித்தோரகரில் தெரு நாடகங்களும் நடத்தப்படுகின்றன. இவை கிராமங்களில் நடத்தப்படுவதோடு மட்டுமின்றி, நிறைய பேரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சந்தைகளிலும் நடத்தப்படுகின்றன. கதையை காட்சிப்படுத்துவதன் மூலம், பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் பிரச்சினை குறித்து மக்களுக்கு உணரச் செய்யப்படுகிறது. இந்த தெரு நாடகங்கள் மூலமாக, பெண் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள், வாழ்க்கை முழுக்க பெண்கள் சந்திக்கும் சிரமங்கள் மிக நன்றாக எடுத்துக்காட்டப் படுகின்றன. கையெழுத்து இயக்கம், உறுதி அளித்தல் மற்றும் பிரமாணம் எடுத்தல் நிகழ்ச்சி மூலம், BBBP-ன் தகவல்கள் PG கல்லூரிகளின் 700 மாணவர்கள் மற்றும் ஏராளமான ராணுவத்தினருக்கு சென்றடைந்துள்ளன.

பஞ்சாபில் மான்சா மாவட்டத்தில் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. உடான் - உங்கள் கனவின்படி ஒரு நாள் வாழ்ந்திடுங்கள் - என்ற திட்டத்தின் கீழ் VI- XII வரை பயிலும் மாணவிகளிடம் இருந்து மான்சா நிர்வாகம் திட்டங்களை வரவேற்றுள்ளது. தாங்கள் எதிர்காலத்தில் கனவு காணக்கூடிய ஒருவருடன் - டாக்டர்,  காவல் துறை அதிகாரி, பொறியாளர், ஐ.ஏ.எஸ். மற்றும் பி.பி.எஸ். அதிகாரிகள் போன்றவர்களுடன் - ஒரு நாள் செலவழிக்க அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தாங்கள் விரும்பும் தொழில் செய்பவருடன் ஒரு நாள் செலவழிக்க 70க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்கெனவே வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் எப்படி தொழில் சூழ்நிலையில் செயல்படுகிறார்கள் என்பதை நேரில் கண்டறிந்து, எதிர்கால தொழிலை தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்க இது உதவியாக உள்ளது.

Explore More
PM Modi's reply to Motion of thanks to President’s Address in Lok Sabha

Popular Speeches

PM Modi's reply to Motion of thanks to President’s Address in Lok Sabha
Modi govt's next transformative idea, 80mn connections under Ujjwala in 100 days

Media Coverage

Modi govt's next transformative idea, 80mn connections under Ujjwala in 100 days
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister also visited the Shaheed Sthal
March 15, 2019

Prime Minister also visited the Shaheed Sthal