பிரதமர் திரு. மோடி எப்படி எப்போதும் சோர்வடையாமல் இருக்கிறார்? இவ்வளவு பரபரப்பான சூழலிலும் ஒரு இயந்திரத்தைப் போல தொடர்ந்து சிறப்பாக இயங்க முடிந்த அவரது ஆற்றலின் மூலம் எது? இந்த கேள்வியை அவரது ஆதரவாளர்களும் சரி, அவரை விமர்சிப்பவர்களும் சரி அவரிடம் எப்போதும் கேட்கிறார்கள்.
புதுதில்லி சார்ந்த தொலைக்காட்சி ஒன்று பிரதமரின் முதல் டவுன்ஹால் உரையாடலை ஒளிபரப்பிய போது இந்த கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அவர் அதற்கு அளித்த பதில் நடைமுறைக்கு ஒத்துவருவதாகவும், ஆழ்ந்த தத்துவங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது. சோர்வு என்பது ஒரு நோக்கத்தை நோக்கி வேலை செய்யும்போது ஏற்படுவதல்ல. இன்னும் மீதமிருக்கும் வேலைகளை எண்ணியே ஏற்படுவது. மோடியின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால், “வேலை செய்யாமல் இருக்கும்போதுதான் நம் சோர்வடைகிறோம். வேலை நமக்கு திருப்தியளிக்கிறது. அந்த திருப்திதான் நமக்கு ஆற்றலை அளிக்கிறது. இதை நான் பலமுறை உணர்ந்து என் இளம் நண்பர்களிடமும் சொல்லியிருக்கிறேன். சோர்வு என்பது மனம் சார்ந்தது. எல்லோரிடமும் ஏராளமான வேலைகளைச் செய்ய தெம்பு இருக்கிறது. புதிய சவால்களை ஏற்றால், உங்கள் உள்மனம் உங்களுக்கு துணை நிற்கும். நம் இயல்பிலேயே அது இருக்கிறது,”
அவரது தத்துவம் எளிமையானது என்றாலும் ஆழமானது. உங்கள் வேலையை நீங்கள் மகிழ்ச்சியுடன் செய்யும்போது சோர்வடையவே மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் செய்யும் வேலையின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.