நரேந்திர மோடியின் பணி மற்றும் பயணத்தை கவனத்தில் கொண்டால் அவருக்கு உண்மையிலேயே திரைப்படங்களைப் பார்க்க நேரமே கிடையாது. “திரைப்படங்களின் மீது எனக்குப் பொதுவாகவே ஈடுபாடு கிடையாது. ஆயினும் எனது இளமைக் காலத்தில் நான் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன், அதுவும் இளைஞர்களால் உருவாக்கப்பட்டவற்றை மட்டும் ஆர்வமிகுதியால் பார்த்திருக்கிறேன். எனினும் பொழுதுபோக்கிற்காக மட்டும் திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு இருந்ததே இல்லை. அந்த திரைப்படங்கள் கூறும் கதைகளில் வாழ்க்கைக்கான பாடத்தைத் தேடுவது எனது பழக்கமாக இருந்தது. ஆர்.கே. நாராயண் எழுதிய நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கைட்’ என்ற புகழ்பெற்ற இந்தித் திரப்படத்தைக் காண நான் எனது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்றது நினைவிருக்கிறது. அந்தப் படம் பார்த்த பின்னர், நான் எனது நண்பர்களுடன் தீவிர விவாதத்தில் ஈடுபட்டேன். ஒவ்வொரு நபரும் தனது உள்ளுணர்விலிருந்து வழிகாட்டுத்லைப் பெறுகின்றனர் என்பதே அந்தப் படத்தின் மைய்யக்கரு என்பது என் வாதமாக இருந்தது. ஆனால் நான் வயதில் சிறியவனாக இருந்ததால் எனது நண்பர்கள் நான் கூறியதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை!” என்று மோடியே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். வேறு காரணத்திற்காக கைட் திரைப்படம் அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது – வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்கறையின் போது உதவியின்மை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் துயரம் தான் அது. அதன் பின்னர் தன் வாழ்வில், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, குஜராத் மாநிலத்தில் தனது ஆட்சியின் போது அவர் தண்ணீர் சேமிப்புக்கான நிறுவன முறை நுணுக்கங்களை மேம்படுத்துவதில் அதிகபட்ச கவனம் செலுத்தினார். பிரதமரான பின்னர் அவர் இந்தத் திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்தினார்.
திரு மோடி தனது பணிகளில் மூழ்கிய பிறகு, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்துக்குத் தேவையானவற்றுக்கே முன்னுரிமை அளித்ததால், திரைப்படங்களைப் பார்ப்பதற்கான நேரம் அவருக்குக் கிடைக்காமல் போனது. எனினும் கலை மற்றும் கலாச்சார உலகுடன் அவர் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார். நமது ஒட்டுமொத்த கலாச்சார உணர்வுகளில் நமது கலைஞர்களின் பங்களிப்புக்களை மதிக்கும் வகையில், திரு மோடி, குஜராத்தில் பட்டங்கள் திருவிழா மற்றும் மிகச் சமீபத்தில் இந்தியா கேட் அருகே ராஜ்பாத்தில் பாரத் பர்வ் ஏற்பாடு செய்தது வரை பல புதுமை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
மோடிக்கு பிடித்தமான பாடல் இருக்கிறதா? 1961ம் ஆண்டு வெளியான ‘ஜெய் சித்தோர் படத்தில் லதா மங்கேஷ்கரின் இனிய குரலில் ஒலித்த "ஓ பவன்வேகாசே உடுனே வாலே கோடே" (O Pavan vega se udanewale ghodhe) பாடல் என உடனடியாக வருகிறது பதில். பாரத் விய்யஸின் புதிய சக்தி தரும் பாடல் வரிகள் எஸ். என் திரிபாதியின் உணர்ச்சிபொங்கும் இசையில் வந்த "तेरेकंधोंपेआजभारहैमेवाड़का, करनापड़ेगातुझेसामनापहाड़का....हल्दीघाटीनहींहैकामकोईखिलवाड़का, देनाजवाबवहाँशेरोंकेदहाड़का ......" மோடிக்கு பிடித்தமான பாடல்களாகும்