இத்தகையதொரு கேள்வியை எழுப்புவது மிகவும் இயற்கையான ஒன்றுதான். இந்தியப் பிரதமர் எதை சாப்பிட விரும்புவார்? அவர் உணவை மிகவும் விரும்பிச் சாப்பிடுபவரா?
இதைப் பற்றி நரேந்திர மோடியே ஒரு முறை பின்வருமாறு கூறியிருந்தார்:
“பொதுவாழ்க்கையில் வேலை செய்பவர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் வாழ்க்கை என்பது தினசரி வாழ்க்கைக்கு மாறுபட்ட ஒன்றாகவே இருக்கும். எனவே, பொதுவாழ்க்கையில் ஈடுபட ஒருவர் விரும்பினால், அவர் எதையும் தாங்கக் கூடிய வயிறைக் கொண்டவராக இருக்க வேண்டும்.
35 ஆண்டுகள் நான் பல்வேறு பொறுப்புகளில் வேலை செய்ததன் பொருள் என்னவெனில், நாடு முழுவதிலும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. போகிற இடங்களில் எல்லாம் உணவைக் கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டியிருந்தது. கிடைத்த உணவைச் சாப்பிட வேண்டியிருந்தது. எனக்காக என்று தனியாக எதையும் செய்து தருமாறு நான் எப்போதுமே கேட்டதில்லை.
எனக்கு கிச்சடி மிகவும் பிடிக்கும். இருந்தாலும் கூட, எது கிடைக்கிறதோ அதை சாப்பிடுவேன்.”
அவர் மேலும் சொன்னார்: “நாட்டிற்கு ஒரு சுமையாக இல்லாதவாறு எனது உடல் நலத்தை வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன். என் கடைசி மூச்சு உள்ளவரை ஆரோக்கியமானதொரு மனிதனாகவே இருக்க விரும்புகிறேன்.”
பிரதமர் என்ற வகையில் அவர் நிறைய பயணம் செய்ய வேண்டியிருப்பதோடு, ஏராளமான விருந்துகளிலும் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொரு விருந்திலும் பரிமாறப்படும் அந்தந்தப் பகுதியின் சைவ உணவை அவர் மிகவும் விரும்பி உண்பார். மது அருந்தும் பழக்கம் இல்லாதவர் என்பதால் இந்த விருந்துகளில் அவர் கையில் இருக்கும் கோப்பையில் ஏதோவொரு வகையான மதுவிற்குப் பதிலாக தண்ணீரோ அல்லது பழரசமோதான் இருக்கும்.