அனைவருக்கும் வங்கிக்கணக்கு, ஆதார், மொபைல் ஆகிய மூன்றும் இணைந்த ஜாம் திட்டத்தின் பார்வை பல திட்டங்களின் அடிப்படை அஸ்திவாரமாக அமையும். என்னைப் பொருத்தவரை ஜாம் என்பது அதிகபட்ச சாதனை என்பதாகும்
ஒவ்வொரு ரூபாய் செலவிலும் அதிகபட்ச மதிப்பு இருக்க வேண்டும். நமது நாட்டு ஏழைகளுக்கு அதிகபட்ச அதிகாரம் அளிக்க வேண்டும். இந்த மக்களின் மத்தியில் அதிகபட்ச தொழில்நுட்பம் ஊடுருவ வேண்டும்.” – இது பிரதமர் நரேந்திர மோடியின் உரை.
நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிய பிறகும், பெரும் அளவு மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்கவில்லை. இதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர்களுக்கு சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை, அவர்கள் கணக்கில் பணம் சேருவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா எனப்படும் வங்கிக்கணக்குத் திட்டத்தினை ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி வைத்து இந்த அடிப்படை விஷயத்தை அறியப்படுத்தினார்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டதன் சில மாதங்களிலேயே லட்சோப லட்சம் இந்திய மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. ஒரே ஆண்டில் 19 கோடியே 72 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. 16 கோடியே 8 லட்சம் ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் 28 ஆயிரத்து 699 கோடியே 65 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 697 வங்கி தொடர்பாளர்கள் இதில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். ஒரே வாரத்தில் 1 கோடியே 80 லட்சத்து 96 ஆயிரத்து 130 வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்ட கின்னஸ் சாதனையாகும்.
லட்சம் லட்சமாக வங்கிக் கணக்குகள் தொடங்குவது என்பது சவாலானதாகும். அதுவும் அத்தகைய கணக்குகளை தொடங்கிய மக்கள் தங்கள் அதை பயன்படுத்துவதற்கான நடைமுறையை மாற்றிக் கொள்ளுதல் என்பதும் மிகப்பெரிய சவாலாகும். பணம் இல்லாத வங்கிக் கணக்காளர்கள் எண்ணிக்கை என்பது 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 76 .8 சதவீதம் என்பதில் இருந்து 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 32 .4 சதவீதமாக குறைந்துவிட்டது. இது தவிர 131 கோடி ரூபாய் மிகைப்பற்று ( ஓவர் டிராப்ட்) ஆக பெறப்பட்டுள்ளது.
இது எல்லாம் பிரதமர் மோடியின் ஆர்வம், மக்களை அணுகும் சக்தி, அரசு நிர்வாகத்தை மேற்கொள்ளும் திறனால் சாத்தியப்பட்டது. அரசு மற்றும் மக்களின் ஒருமித்த ஒத்துழைப்பினால் இந்த செய்வதற்கரிய செயல் சாத்தியமாயிற்று.
லட்சோப லட்சம் இந்திய மக்கள் வங்கிக்கணக்கை பெற்றதால், அதன்மூலம் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் பெரும் பங்கினை பெற்றுவிட்டார்கள். இப்போது மானியங்கள் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கும் முறையில் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைகிறது. இதன் மூலம் லஞ்சம், மற்றும் முறைகேடு தடுக்கப்பட்டுள்ளது. இப்போது சமையல் எரிவாயு மானியத்தை பயனாளிகளுக்கு வழங்கும் பாகல் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது- இந்த திட்டத்தின் கீழ் 14 கோடியே 62 லட்சம் பேர் நேரடியாக வங்கிக்கணக்கில் மானியத்தினை பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் 3 கோடியே 34 லட்சம் போலி அல்லது செயல்படாத வங்கிக்கணக்குகளை அடையாளம் காண உதவியது. அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை சேமிக்க முடிந்தது. இப்போது அரசு 35 முதல் 40 திட்டங்களில் நேரடியாக பயனாளிகளுக்கு பண பரிமாற்றத்தினை செய்து வருகிறது. அதன் மூலம் 2015ம் ஆண்டில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கணக்கின் மூலம் பயனாளிகளுக்கு சேர்ந்துள்ளது.
மக்களுக்கு அடிப்படை தேவையான வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டதும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது வரலாற்றுச் சிறப்பு மிக்க காப்பீடு மற்றும் ஓய்வூதிய காப்பு திட்டத்தினை நாட்டு மக்களுக்கு வழங்கியது. பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா, திட்டம் பயனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்குகிறது. பிரதம மந்திரியின், ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் ஆண்டுக்கு 330 ரூபாய் செலவில் ஆயுள் காப்பீட்டை மக்களுக்கு வழங்குகிறது. அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பயனாளிகளின் பங்களிப்பு அடிப்படையில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை முதுமை காலத்தில் வழங்குகிறது. 9 கோடியே 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா திட்டத்திலும், 3 கோடி பேர் பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்திலும் சேர்ந்துள்ளனர். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 15 லட்சத்து 85 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்