வேலை வாங்குவதில் கடினமானவர் என்ற பெயர் மோடி அவர்களுக்கு உண்டு. ஏனெனில் தன் அணியின் முழுதிறனுக்கேற்ப அவர்களிடம் வேலை வாங்குவதோடு, அதற்கு மேலும் எல்லைகளை தொடுவதற்கு ஊக்கப்படுத்துவார். ஆனால் அவர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படாதபோது மோடி நிதானமிழப்பாரா? மோடி கோபக்காரரா?
ஆகஸ்ட் 31, 2012ல் அப்படியொரு சூழல் எழுந்தது. அந்த சூழலை நோக்கினால் அப்படியான நிலைமைகளை மோடி எப்படி கையாள்வார் என்பது புரியும். இந்திய அரசியல் தலைவர் ஒருவரின் முதல் கூகுள் ஹேங்கவுட் அமர்வு அது. உலகமே அதை எதிர்நோக்கியிருந்ததால் கூகுள் சர்வர்கள் சுமை தாங்காமல் பிரச்சினைக்குள்ளாகி வேலை செய்யாமல் போய்விட்டன. யூடியூபில் நேரடி ஒளிபரப்பு 45நிமிடம் தாமதமாகவே துவங்கியது. உரையாடல் முடிந்தபின் கூகிள் சர்வதேச குழு மரியாதை நிமித்த சந்திப்புகாக மோடியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். மிகவும் கச்சிதம் பார்ப்பவர் ஆயிற்றே, வார்த்தைகளை கொட்டிவிடுவாரோ என பயந்த அவர்களுக்கு மோடியை புன்னகையுடன் பார்த்து ஆச்சரியம். மோடி அவர்களின் வருங்கால தொழில்நுட்பங்களைப் பற்றி கேட்டறிந்ததோடு, அன்று நடந்த நிகழ்வை வருங்காலங்களில் என்ன செய்தால் தடுக்கலாம் என்பது குறித்து கேட்டறிந்தார்.
இந்த சம்பவத்தில் மட்டுமல்ல, மோடியின் அடிப்படை குணமே எப்பேர்ப்பட்ட சூழலிலும் நிதானமிழக்காமல் இருப்பதுதான். அவருடன் உரையாடிய எல்லோருக்குமே அது தெரியும். அவர் கோபக்காரர் கிடையாது. ஒரு தனிநபரோ, குழுவோ அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை என்றால், அந்த அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள அவர்களை வலியுறுத்துவார். கற்றவற்றை அடுத்தமுறை பயன்படுத்தச் சொல்வார். உங்களுக்கு கற்பதில் விருப்பம் இருக்கும்வரை மோடி உங்கள் பக்கம் துணை நிற்பார்.