அன்பார்ந்த நண்பர்களே,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விடுவிக்கப்பட்ட இடைவெளிக்கு பின் நாம் அனைவரும் மீண்டும் சந்திக்கிறோம். நிதிநிலை அறிக்கை குறித்து விரிவான விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதம் தரமாக அமையும் என்று நான் உறுதியாக உள்ளேன். நலிந்தோர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும். சரக்கு மற்றும் சேவை வரி நல்ல பலன்களை அளிக்கும் என்று நாம் நம்புகிறோம். அனைத்து மாநிலங்களும் இதற்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்த்தே இதற்கு முக்கியக் காரணமாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் இது குறித்து நல்ல முடிவுகளையே தரும் என்று நம்புவதோடு, அவர்களின் பதிலும் ஒத்துழைக்கும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பாக ஜனநாயக முறையில் விரிவான விவாதங்கள் நடத்தி, முடிவுக்கு வந்த பின்பே நாங்கள் இந்த திசையை நோக்கி பயணிக்கிறோம். இந்த அவையில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்பையையும் உறுதி செய்ய முயற்சி எடுக்கப்படும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
There will be detailed discussion on the Budget and I am sure the level of debate and discussion will be of good quality: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 9, 2017
Matters that will benefit the poor will be discussed during this session: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 9, 2017