இந்தியாவில் உள்ளுறை தொழில் முனைவோர் ஆற்றல் பெருமளவு உள்ளது என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு, அந்த ஆற்றல் முறையாக பட்டைதீட்டப்பட்டால் வேலை தேடுவோரை விட வேலை கொடுப்பவர்கள் அதிகம் கொண்ட தேசம் என்ற பெருமையை நாம் பெறமுடியும் – பிரதமர் நரேந்திரமோடி
தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது நாட்டில் தொழில் முனைவோரை அதிகப்படுத்துவதில் நோக்கம் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் என்பது இந்தியாவில் தொழில்முனைதலை நான்கு தூண்களிலும் ஊக்குவிப்பதை அடிப்படையாக கொண்டதாகும். அதாவது உற்பத்தி துறையில் மட்டுமல்ல இதர துறைகளிலும் தொழிலை ஊக்குவிப்பதாகும்.
புதிய நடைமுறைகள் - இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் எளிதான வர்த்தகத்தை அங்கீகரிக்கிறது. தொழில் முனைதலை ஊக்குவிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தினை அதிகமாக ஊக்குவிக்கிறது.
புதிய அடிப்படை கட்டமைப்பு –
தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு நவீன மற்றும் சாதகமாக கட்டமைப்புகள் கிடைப்பது மிக முக்கியமான தேவை. இதற்காக அரசாங்கம்தொழில் தடங்களையும், நவீன நகரங்களையும் (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்குகிறது. இவற்றில் அடிப்படை கட்டமைப்புகள் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் அதிவிரைவு தொலைத்தொடர்பு வசதிகளுடனும், ஒருங்கிணைந்த கட்டமைப்பு வசதிகளுடனும் உருவாக்கப்படுகின்றன.
புதிய துறைகள் –
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் உற்பத்தி துறையில் 23 பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடிப்படை கட்டமைப்புகள், சேவை நடவடிக்கைகள், முழுமையான தகவல்கள் பங்குதாரர்களுக்கு இடையே பரிமாற்றம் ஆகியவைக்கு முன்னுரிமை.
புதிய மனப்போக்கு –
அரசாங்கம் என்பது கட்டுப்பாட்டு அமைப்பு என்பது தொழில்துறையினரின் மனதில் பதிந்த வழக்கமாக உள்ளது. இதனை போக்கிடும் நோக்கத்தில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் உள்ளது. அரசாங்கம் தொழில்துறையினருடன் எப்படி கலந்துரையாடி மாற்றத்தினை கொண்டுவருகிறது என்பது புரிய வைக்கப்படுகிறது.. அரசின் அணுகுமுறை தொழில்துறைக்கு வசதி ஏற்படுத்துவதேயன்றி, கட்டுப்பாட்டு அமைப்பாக இருப்பது அன்று.
அரசாங்கம் தொழில்முனைதலை ஊக்குவிக்க மூன்று அம்ச திட்டத்தினை செயல்படுத்துகிறது. அதாவது உடன்பாடு,மூலதனம், ஒப்பந்த அமலாக்கம் ஆகியவற்றை கருத்தில்கொண்டே அரசு செயல்படுகிறது.
உடன்பாடுகள் –
எளிதான வணிகம் என்ற நோக்கத்தினை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் விரைவான முன்னேற்றம் பரவலாகி உள்ளது. இதனால் உலக வங்கி வெளியிட்ட பட்டியலில் புதிய தொழில்கள் தொடங்க உகந்த சூழலில் இந்தியா 130- வது இடத்தை பிடித்துள்ளது. இது முன்பு எப்போதும் இல்லாத நிலையாகும். தேவையில்லாத உடன்பாடுகள் அகற்றப்பட்டு, தேவையான அனுமதிகள் தொழில் தொடங்குவதற்காக இணைதளம் மூலமாக கொடுக்கப்படுகிறது.
தொழில்தொடங்குவதற்கான உரிமம் மற்றும் தொழில்முனைவோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை இணையவழியிலேயே நடைபெறுகின்றன. இந்த சேவை தொழில் முனைவோருக்கு 24•7 மணிநேரமும் கிடைக்கின்றன. அரசு மற்றும் அரசு சார்ந்த பல்வேறு முகமைகளிடம் தொழில்சார்ந்த அனுமதிகளை பெறுவதற்காக காலதாமதம் ஏற்படுவதை தடுக்க 20 சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒற்றைச்சாளர முறையில் செயல்படுகிறது.
இந்திய அரசு உலகவங்கி மற்றும் நிதி, இடர் மற்றும் வர்த்தக உதவிசார்ந்த ஆலோசனைகளை வழங்கும் கே.பி.எம்.ஜி. உடன் இணைந்து மாநிலங்களில் வர்த்தக சீர்திருத்த நடவடிக்கைகள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பது மதிப்பிடுகிறது. இதுதொடர்பான தரப்பட்டியல் மாநிலங்கள் ஒவ்வொன்றும் மற்றொன்றிடம் தொழில்சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து தெரிந்துகொள்ள முடிகிறது. வெற்றிகளை நிலைநிறுத்த முடிகிறது. நாடு தழுவிய அளவில் பரவலான வர்த்தகம் என்ற இலக்கை எட்ட உதவுகிறது.
இந்தியாவில் முதலீட்டை ஈர்க்கவேண்டும் என்ற நோக்கத்தினை எட்டுவதற்காக அன்னி முதலீட்டிற்கான விதிமுறைகளில் தளர்வுகள் தாராளமாக செய்யப்பட்டுள்ளன.
மூலதனம்-
ஏறத்தாழ 58 மில்லியன் பெருநிறுவனங்கள் அல்லாத தொழில் நிறுவனங்கள் 128 மில்லியன் வேலைவாய்ப்புகளை இந்தியாவில் வழங்கி வருகின்றன. இவற்றில் 60 சதவீதம் ஊரகப்பகுதிகளில் உள்ளன. மேலும் இதில், 40 சதவீத நிறுவனங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பபைச் சேர்ந்தவர்களை உரிமையாளர்களாக கொண்டவை. 15 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு சொந்தமானது. ஆனால் வங்கிகளின் கடன் என்பது அவர்களின் நிதிபங்களிப்பில் மிக குறுகிய அளவாக உள்ளது. பெரும்பாலான இத்தகைய நிறுவனங்களின் பொருளாதாரம் குறைந்த கடனை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த நிலமையை மாற்றுவதற்காக மத்திய அரசானது பிரதம மந்திரியின் முத்ரா யோஜனா மற்றும் முத்ரா வங்கி திட்டத்தினை கொண்டுவந்துள்ளது.
சிறு தொழில் நிறுவனத்தினர் அடிக்கடி அதிக வட்டிக்கு கடன்வாங்கி தொழில்நடத்துவதை தவிர்க்கும் நோக்கில் பிணை இன்றி எளிய கடன்பெற இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 18 லட்சம் கடனுதவிகள் மொத்தம் 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வழங்கப்பட்டுள்ளன. 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான கடன் பெற்றவர்கள் எண்ணிக்கை கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் முந்தைய ஆண்டை காட்டிலும் 555 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒப்பந்த அமலாக்கம் –
ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி அடையவேண்டும். சமரச தீர்வு சட்டங்கள் எளிதாக்கப்பட்டு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும். இத்தகைய சட்டம் வழக்குகளை முடிப்பதற்கான கால வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும். அத்துடன் சமரச தீர்வு நீதிமன்றங்கள் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவையாக இருக்க வேண்டும்.
அரசாங்கம் தற்போது நவீன திவால் நடைமுறைகளை கொண்டுவந்துள்ளது. இது தற்போது நடைமுறையில் உள்ள வர்த்தகத்தை எளிதாக்க உதவும்.