மோடியின் குர்த்தா மக்களிடையே ஏராளமானோரால் பின்பற்றப்படும் ஒரு நாகரீகமாக இப்போது மாறியிருக்கிறது. ‘நாகரீகத்தின் அடையாளம்என்பதாக மாறியுள்ள இந்தக் குர்த்தாவின் துவக்கமோ மிகவும் எளிமையானதாகும்.

இந்தமோடி குர்த்தாவின் துவக்கம் பற்றி பிரதமர் சொன்னது இதுதான்:

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய அமைப்புகளில் எனது வேலை என்பது மிக அதிகமான அளவிலான பயணமாக மட்டுமே இருக்கவில்லை. அவை நிச்சயமற்றதாகவும், அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் இருந்தன. சொந்தத் துணிகளை எப்போதும் நானே துவைத்துக் கொள்ளும் பழக்கமுள்ளவன் என்ற வகையில், முழுக் கை வைத்த குர்த்தாவை துவைப்பது கடினமானதாகவும், அதிகமான நேரம் பிடிப்பதாகவும் இருப்பதை உணர்ந்தவுடன் இந்தக் குர்த்தாவின் கையை வெட்டி விட்டு அரைக் கை வைத்த குர்த்தாவாக மாற்ற முடிவு செய்தேன்.”

இப்படித்தான் மோடி குர்த்தா பிறந்தது!

நாட்கள் செல்லச் செல்ல, குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் மோடி குர்த்தா உலகம் முழுவதிலும் புகழ் பெற்று விட்டது. ’மோடி முகமூடிகள் தொப்பிகள், டி-சர்ட்கள், பேட்ஜுகள், ஏன் சாக்லேட்டுகளும் கூட அவ்வப்போது அவர் பெயரால் விற்கப்பட்டு வந்தன. என்றாலும் விறைத்த, வண்ண மயமான, எளிமையான, அழகான மோடி குர்த்தாவைப் போல வேறு எதுவும் அந்த அளவிற்குப் பிரபலமாகவில்லை.