A delegation of Japanese Parliamentarians meets PM Modi
PM calls for strengthening bilateral cooperation in disaster risk reduction and disaster management between India & Japan

ஜப்பான் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் இன்று (வியாழக்கிழமை) பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தனர். திரு. டோஷ்ஹிரோ நிகாய் தலைமையிலான இந்தக் குழுவில் திரு. மோட்டோ ஹயாஷி, திரு. டட்சுவோ ஹிரானோ ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜப்பான் – இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்புறவுக் கூட்டத்தில் தனது கலந்துரையாடலை பிரதமர் நினைவுகூர்ந்தார். இரு தரப்பு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் அதிகரித்து வருவதை அவர் வரவேற்றார். மாநில அளவிலான சட்டப் பேரவைகளின் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ஆழிப் பேரலைகளால் (சுனாமிகள்) நேரும் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், இயற்கைப் பேரிடர் ஆபத்தைக் குறைப்பது மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றிலும் இரு நாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் திரு. டோஷிஹிரோ நிகாய் மேற்கொண்டுள்ள முன்முயற்சியை பிரதமர் வரவேற்றார்.

ஜப்பான் நாட்டுக்கு அடுத்த வாரம் மேற்கொள்ள இருக்கும் அரசுமுறைப் பயணம் குறித்து மிகவும் ஆவலாக இருப்பதாகவும் அந்தக் குழுவிடம் பிரதமர் கூறினார்.