வ. எண்

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்  பெயர்

விவரங்கள்

1.

இந்தியக் குடியரசு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் இடையே விரிவான  வணிகரீதியிலான பங்கேற்பு குறித்த ஒப்பந்தம்

ஆகஸ்ட் 2015 மற்றும் பிப்ரவரி 2016ல் வெளியிடப்பட்ட உயர் நிலை கூட்டு ஒப்பந்தங்களின்படி ஒப்புக்கொள்ளப்பட்டவாறு,  விரிவான வணிக பங்கேற்பின் கீழ் அடையாளம் காணப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்புக்கான துறைகளை தனித்துவமாகக் காட்டுவதற்கான பொதுவான வரையறையாக இந்த ஒப்பந்தம் இருக்கும்.

2..

பாதுகாப்பு தொழில் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியக் குடியரசு பாதுகாப்புத் துறை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் பாதுகாப்புத் துறை இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாதுகாப்புத் துறையில் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்துக்கான அடையாளம் காணப்பட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. இரு நாடுகளிலும் அரசு மற்றும் தனியார் துறையினருக்கு இடையே கல்வி, ஆராய்ச்சி, மேம்படுத்தல், புதுமை சிந்தனை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவையும் இதில் அடங்கும். ராணுவத் தளவாடங்கள், பாதுகாப்புத் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்பம் மாற்றுவது போன்ற துறைகளில் இரு தரப்பினரும் ஒத்துழைப்பர்.

3.

கடல் போக்குவரத்தில் ஒத்துழைப்பு குறித்து இந்தியக் குடியரசின் அரசுக்கும் ஐக்கிய அரசு எமிரேட் அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கடல் போக்குவரத்து, ஒப்பந்த தரப்பினருக்கு இடையே தாராளமான பணப் பரிமாற்றம், கப்பல்களின் ஆவணங்களை பரஸ்பரம் அங்கீகரித்தல் ஆகியவற்றின் மூலம் இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வரையறையை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அளிக்கிறது.

4.

பயிற்சி, சான்றளித்தல் மற்றும் கண்காணித்தல் ஒப்பந்தம் (STCW78) மற்றும் அதன் மீதான திருத்தங்களின்படியான தரப்படுத்தலில் உள்ள விதிகளின்படி சான்றிதழ் தகுதி பரஸ்பர அங்கீகரிப்பு குறித்து, இந்தியக் குடியரசின் கப்பல் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் இயக்குநரகத்துக்கும், ஐக்கிய அரபு எமிரேட் தரைவழி மற்றும் கடல்சார் மத்திய போக்குவரத்து ஆணையம் - இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கடல் போக்குவரத்து அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களின் தகுதி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான வரையறையை உருவாக்குவதன் மூலம், பொதுவாக கடல்சார் பொருளாதார நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

5.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு, இந்தியக் குடியரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கும், ஐக்கிய அரபு எமிரேட் தரைவழி மற்றும் கடல்சார் மத்திய போக்குவரத்து ஆணையத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தொழில்நுட்பங்கள், சரக்கு கையாள்வது, கிடங்கில் சேமித்து வைத்தல் மற்றும் மதிப்பு கூட்டிய சேவைகளில் சிறந்த நடைமுறைகள் மற்றும் முறைமைகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகளில் ஒத்துழைப்பை உருவாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

6.

சட்டவிரோதமாக மனிதர்கள் உள்நுழைவதைத் தடுப்பதற்கான ஒத்துழைப்பு குறித்து இந்தியக் குடியரசின் அரசுக்கும், ஐக்கிய அரபு எமிரேட் அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சட்டவிரோதமாக நுழையும் மனிதர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தடுத்தல், மீட்பது, திருப்பி அனுப்புவதில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

7.

சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் (SME-கள்) மற்றும் ஐக்கிய அரசு எமிரேட் பொருளாதார அமைச்கம் மற்றும் இந்தியக் குடியரசின்  நுண்ணிய, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் (MoSMSME) இடையிலான புதுமை சிந்தனைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

MSME-க்கள் துறைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. கூட்டுத் திட்டங்கள், ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் அவை தொடர்பான செயல்பாடுகளும் இதில் அடங்கும்.

8.

வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளில் இந்தியக் குடியரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்துக்கும், ஐக்கிய அரபு எமிரேட் பருவநிலை மாற்றம் & சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு வேளாண்மைத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வரையறைகளை உருவாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. உணவு பதப்படுத்தலில் ஒப்பந்தம் மற்றும் சாகுபடி நடைமுறைகளின் தொழில்நுட்பங்களை பரிமாறுதலில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இதில் அடங்கும்.

9.

தூதரக, சிறப்பு மற்றும் அரசுமுறை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு உள்நுழைவுக்கான விசா பெறுவதில் இருந்து பரஸ்பரம் விலக்கு அளிப்பது தொடர்பாக இந்திய குடியரசின் அரசுக்கும் ஐக்கிய அரபு எமிரேட் அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூதரக, சிறப்பு மற்றும் அரசுமுறை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இரு நாடுகளுக்கு இடையில் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

10.

நிகழ்ச்சி பரிமாற்றம் தொடர்பாக இந்தியாவின் பிரஸார் பாரதிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டின் எமிரேட்கள் செய்தி ஏஜென்சிக்கும் (WAM) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரஸார் பாரதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டின் எமிரேட்கள் செய்தி ஏஜென்சிக்கும் (WAM) இடையில் ஒளிபரப்புத் துறையில் ஒத்துழைப்பு, நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

11.

பரஸ்பர நலன்கள் உள்ள துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான தொழில் பிரச்சினைகள் நிவர்த்தி நடவடிக்கைகள் குறித்து இந்தியக் குடியரசின் தொழில் வணிக அமைச்சகத்துக்கும், ஐக்கிய அரபு எமிரேட்டின் பொருளாதார அமைச்சகத்துக்கும் இடையிலான  புரிந்துணர்வு ஒப்பந்தம்

பொருள்கள் இறக்குமதி மற்றும் அது சார்ந்த வரிகள் துறையில் தகவல் பரிமாற்றம், செயல்திறன் அதிகரிப்பு, தொழில் பிரச்சினைகள் தீர்வுக்கான நடவடிக்கைகளுக்கு பரஸ்பரம் அடையாளம் காணப்பட்ட துறைகளில் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

12.

எண்ணெய் சேமிப்பு மற்றும் மேலாண்மை குறித்து இந்திய வணிக ரீதியிலான பெட்ரோலிய கையிருப்பு லிமிடெட் மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கு இடையிலான ஒப்பந்தம்

அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் இந்தியாவில் கச்சா எண்ணெய் சேமித்து வைப்பதற்கும், எரிசக்தித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் வணிக ரீதியிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் தேவையான வரையறைகளை உருவாக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

13.

தேசிய உற்பத்திக் கவுன்சில் மற்றும் எடிஹாட் எரிசக்தி சேவைகள் கோ. LLC இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் எரிசக்தி செயல்திறன் சேவைகள் துறையில் ஒத்துழைப்பு பற்றியது.

14.

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகம் & ஐக்கிய அரபு எமிரேட் தேசிய மின்னணு பாதுகாப்பு ஆணையம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கணினிசார் துறையில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு பற்றியது.

 

 

*******