Congratulations to ISRO for the successful launch of PSLV-C37 and CARTOSAT satellite together with 103 nano satellites: PM
This remarkable feat by ISRO is yet another proud moment for our space scientific community and the nation: PM

பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கும் கார்ட்டோசாட் செயற்கைகோளுடன் 103 நானோ செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதற்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (இஸ்ரோ) பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட் மூலம் கார்ட்டோசாட் செயற்கைகோளுடன் 103 நானோ செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோ விற்கு எனது வாழ்த்துகள்.

இஸ்ரோவின் இந்த முக்கிய நிகழ்வு நமது விண்வெளி துறைக்கும் நாட்டிற்கும் மற்றுமொரு பெருமை வாய்ந்த தருணத்தை அளித்துள்ளது.

விண்வெளித் துறையின் செயலரிடம் பேசினேன். இன்று நிகழ்த்திய அசாதாரண சாதனைக்கு, அவருக்கும் அவரின் குழுவிற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.