Heartening to see such warmth, enthusiasm & patience of citizens to bear this limited inconvenience for a greater good: PM
Government is unwavering in its effort to create an India which is corruption free: PM
Heartening to learn that people are actively volunteering to help senior citizens withdraw money & exchange their currency: PM

500ரூ மற்றும் 1000ரூ நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு குடிமக்கள் சீராகவும், பொறுமையாகவும் வங்கிகளில் நோட்டுக்களை மாற்றுவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தனது டுவீட்களில் நாட்டின் நன்மைக்காக மக்களின் ஆர்வம், பொறுமை, அசவுகரியத்தை ஏற்றுக்கொள்ளும் பண்பு ஆகியன தன்னை நெகிழச்செய்வதாக குறிப்பிட்டுள்ளார். ஊழலற்ற இந்தியாவை அமைப்பதில் அரசு நிலையாகவும், உறுதியாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்திய நாட்டின் முன்னேற்றம் ஒவ்வொரு குடிமகனின் வாழ்விலும் பிரதிபலிக்கும் என்றும் தெரிவித்தார்.

“வங்கி அதிகாரிகளிடம் மக்கள் தங்கள் நன்றியை தெரிவிப்பதும், சீராக, பொறுமையாக நோட்டுக்களை மாற்றிக்கொள்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அதுமட்டுமல்லாது நோட்டுக்களை மாற்றுவதற்கு வயதானவர்களுக்கு தானாகவே முன்வந்து இளைஞர்கள் உதவுவது நம்பிக்கை தருவதாக உள்ளது.

மக்களின் இத்தகைய ஆர்வம், பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியன நெகிழவைப்பதாக இருக்கிறது.

அரசு ஊழலற்ற இந்தியாவை அமைப்பதில் உறுதி தவறாமல் இருக்கிறது. இந்திய நாட்டின் முன்னேற்றம் ஒவ்வொரு குடிமகனின் வாழ்விலும் பிரதிபலிக்கும்” என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.