PM Modi campaigns in Haridwar, Uttarakhand
Dev Bhoomi Uttarakhand does not deserve a tainted and corrupt government: PM Modi
Atal ji created Uttarakhand with great hope and promise but successive governments did not fulfil his dreams: PM
Uttarakhand needs two engines, the state government under BJP and the Central government to take the state to new heights: PM
BJP is dedicated to open up new avenues for youth and ensure welfare of farmers: Shri Modi

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்றில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த கூட்டத்திற்கு பெருமளவில் வந்திருப்பதற்காக மக்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

உத்தராகண்ட்டை தேவபூமி என்று வர்ணித்த திரு. மோடி, கறைபடிந்த மற்றும் ஊழல் அரசாங்கம் அங்கே இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். `` உத்தராகண்ட் மாநிலத்தில் ஊழல் ஆட்சி நடைபெறுவது நன்கு தெரிந்த விஷயம்.  தலைமையும் அதைப் பற்றி கவலைப்படவில்லை'' என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

ஒரு தேர்தலோ அல்லது வாக்காளரோ என்பது மட்டும் உத்தராகண்ட் மக்கள் முன் உள்ள கேள்வி அல்ல என்று கூறிய பிரதமர் திரு. மோடி, மாநிலத்தை பெருமைக்குரியதாக ஆக்குவதும் அவர்கள் முன் உள்ள கேள்வி என்று குறிப்பிட்டார். ``ஒரு குழந்தை பதினாறு அல்லது பதினேழு வயதை எட்டும்போது, தனது வாழ்வில் முக்கியமான பருவத்தை எட்டுகிறது. வரக்கூடிய ஆண்டுகள் முக்கியமானவை. அதேபோல, 2000-வது ஆண்டில் பிறந்த உத்தராகண்ட் மாநிலமும், முக்கியமான காலக்கட்டத்தில் நுழைகிறது. வரக்கூடிய ஐந்து ஆண்டுகள் மாநிலத்துக்கு முக்கியமானதாக இருக்கும்'' என்று மோடி கூறினார்.

உத்தராகண்ட் மாநிலம் உருவானதில் முன்னாள் பிரதமர் திரு அடல்பிகாரி வாஜ்பாயி பங்களிப்பை திரு மோடி நினைவுகூர்ந்தார். ``மிகுந்த நம்பிக்கை மற்றும் உத்தரவாதத்துடன் உத்தராகண்ட் மாநிலத்தை அடல்ஜி உருவாக்கினார். மாநிலத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அடுத்தடுத்து வந்த அரசுகள் அதைச் செய்யவில்லை. அடல்ஜியின் கனவுகளை அந்த அரசுகள் நிறைவேற்றவில்லை'' என்று திரு மோடி கூறினார்.

உத்தராகண்ட் மாநிலம் செழிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பியது என்றும், அதனால் இறைவனின் உறைவிடங்கள் என கருதப்படும் நான்கு தாம்களை (சார் தாம்) இணைக்க நல்ல சாலைகளை அமைக்க ரூ.12,000 கோடி ஒதுக்கியது என்றும் திரு. மோடி தெரிவித்தார். ``உத்தராகண்ட் மாநிலத்துக்கு இரண்டு என்ஜின்கள் தேவை. பா.ஜ.க. தலைமையின் கீழான மாநில அரசும், மாநிலத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் மத்திய அரசும் தேவை'' என்று பிரதமர் கூறினார்.

உத்தராகண்ட் மாநில வளர்ச்சி பா.ஜ.க.வின் முன்னுரிமை என்று திரு மோடி குறிப்பிட்டார். இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், விவசாயிகள் நலன்களை உறுதி செய்யவும் பாடுபடுவதற்கு பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.  அண்மையில் பூகம்பம் ஏற்பட்ட போது மத்திய அரசு எவ்வாறு உடனடி நடவடிக்கை எடுத்தது என்பதை திரு மோடி குறிப்பிட்டுக் காட்டினார். ``சில நாட்களுக்கு முன்பு பூகம்பம் ஏற்பட்டபோது, பிரதமர் அலுவலகம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வந்தது. மாநிலத்துக்கு உடனடியாக குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கேதார்நாத் மற்றும் உத்தராகண்ட்டில் மற்ற பகுதிகளில் துயரங்கள் நிகழ்ந்தபோது, காங்கிரஸ் தலைவர் வெளிநாட்டில் இருந்தார். அவர் இங்கேயே இல்லை'' என்று மோடி கூறினார்.


உத்தராகண்ட் மாநிலம் தைரியசாலிகளின் பூமி என்றும் திரு மோடி குறிப்பிட்டார். ``பாதுகாப்புப் படையினரின் தீரச் செயல்களை காங்கிரஸ் மதிப்பதில்லை. அவர்கள் அதிகாரத்தில் இருந்தனர். ஆனால் ஒரு பதவி நிலைக்கு ஒரே ஓய்வூதியம் (OROP) பிரச்சினையை நாற்பது ஆண்டுகளாக தீர்க்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஒரு உறுதி எடுத்துக் கொண்டு, முன்னாள் ராணுவத்தினரின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, OROP திட்டத்தை செயல்படுத்தினோம்'' என்று மோடி கூறினார்.

``எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) பகுதியில் நமது பாதுகாப்புப் படையினர் துல்லியத் தாக்குதல் நடத்தினர். தங்களின் வீரத்தை அவர்கள் பறைசாற்றினர். ஆனால் அதைக்கூட சிலர் ஏற்கவில்லை. அதற்கு ஆதாரங்களை கேட்கிறார்கள்! நமது பாதுகாப்புப் படையினருக்கு அவர்கள் அளிக்கும் மரியாதை இதுதானா?'' என்று திரு. மோடி கேள்வி எழுப்பினார்.

ஏராளமான பா.ஜ.க. தொண்டர்களும் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.