It is the responsibility of everyone to work towards cleanliness: PM Modi
Cleanliness is not something to be achieved by budget allocations. It should become a mass movement: PM Modi
Like 'Satyagraha' freed the country from colonialism, 'Swachhagraha' would free the country from dirt, says PM Modi

புது தில்லியில் நடக்கும் இண்டோசான் எனும் இந்திய சுகாதார கருத்தரங்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று துவக்க உரை ஆற்றினார்.

இதில் பேசிய பொது, அசுத்தமோ அல்லது அசுத்த சூழ்நிலையோ யாருக்கும் பிடிக்காது, அதே சமயம் தூய்மை பழக்கத்தை உருவாக்க சில முயற்சிகள் தேவை என்று பிரதமர் கூறினார்.

தூய்மை தொடர்பான உணர்வுகள் குழந்தைகளிடையே பெருகி வருகிறது, என்று அவர் தெரிவித்தார். தூய்மை இந்தியா இயக்கம் மக்கள் மனதை சென்றடைகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. தூய்மை தொடர்பாக தற்போது நகரங்கள் மற்றும் ஊரகங்களுக்கு இடையே சாதகமான போட்டி இருந்து வருகிறது.

தூய்மை இயக்கத்தில் ஊடகத்தின் பங்கினை பாராட்டிய பிரதமர், தூய்மை முயற்சியில் என்னைவிட அதிக பங்கு ஆற்றியது ஊடகங்கள் என்று கூறினார்.

தூய்மை என்பதை நிதி ஓதுக்கீடு மூலம் சாதிக்க முடியாது, அது பெரிய மக்கள் இயக்கமாக மாற வேண்டும், என்பதை பிரதமர் வலியுறுத்தினார்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதி அடைவதற்காக காந்தி மேற்கொண்ட சத்யாகிரகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் இந்தியாவை அசுத்தத்திலிருந்து விடுபட தூய்மைகிரகம் மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

பல காலமாக மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்பது நமது பழக்கமாக உள்ளது. இவை, மேலும் தொழில்நுட்பம் சார்ந்து நடக்க வேண்டும்.

தூய்மைக்கான விருது பெற்ற அனைவருக்கும் குறிப்பாக மக்கள் பங்களிப்புடன் பணியாற்றிய அமைப்புகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.