It is due to this ‘Jan Shakti’ that a person born in a poor family can become the Prime Minister of India: Shri Modi
Advancement of budget would ensure better utilization of funds: PM Modi
Our struggle is for the poor. We will ensure that they get their due: PM
Demonetisation is a movement to clean India from corruption and black money: Prime Minister

மக்களவையில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பதில் அளித்து பேசினார். விவாதங்களுக்கு உயிர் ஊட்டியதற்கும் ஆழ்ந்த கருத்துகளை பரிமாறியதற்கும் அவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

‘மக்கள் சக்திக்கு’ தனிச் சிறப்பு வாய்ந்த சக்தி இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், அந்த மக்கள் சக்தியினால்தான் ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவன் இன்று இந்திய நாட்டின் பிரதமராக ஆக முடிந்தது என்றார்.

சுதந்திர போராட்டத்தில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யும் வாய்பை தவறவிட்டு, ஆனால் சுதந்திர இந்தியாவில் பிறந்து நாட்டுக்காக வாழ்ந்து சேவை செய்யும் தன்னைப்போல் பலர் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். மக்கள் சக்தியின் மீது உள்ள நம்பிக்கை நல்ல விளைவுகளைக் கொண்டு வரும் என்பதை குறிப்பிட்ட பிரதமர், அவை உறுப்பினர்கள் இதனை புரிந்துகொண்டு நமது மக்களின் உள்ளார்ந்த வலிமையைப் பயன்படுத்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் தேதி மாற்றத்தின் பின்னால் உள்ள காரணத்தை விளக்குகையில், இது நிதியின் பயன்பாடு சிறப்பாக அமைவதை உறுதி செய்யும் என்று பிரதமர் கூறினார். அதேபோல், நாட்டின் போக்குவரத்து துறைக்கு இப்போது விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது, அது ஒரே மத்திய நிதிநிலை அறிக்கையினால் மட்டுமே சாத்தியம் என்று அவர் கூறினார்.

தான் பதவி ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து ஏற்பட்டு வரும் மாற்றம் தனக்கு மனநிறைவை அளிப்பதாக பிரதமர் கூறினார். அதாவது, மோசடிகளில் எவ்வளவு பணம் இழக்கப்பட்டுள்ளது என்பதில் இருந்து எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதை நோக்கி இன்று விவாதங்கள் மாறியுள்ளது, என்பதை விளக்கினார்.

பணத்தின் மதிப்பு இழப்பினை தூய்மை இந்தியா இயக்கத்துடன் ஒப்பிட்டு கூறிய பிரதமர், இந்த முயற்சி இந்தியாவை ஊழல் மற்றும் கருப்பு பணத்தில் இருந்து தூய்மைப்படுத்தும் இயக்கம் என்று குறிப்பிட்டார்.

பண மதிப்பு இழப்பு குறித்த சட்டங்களில் அடிக்கடி ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கையில், இந்த முயற்சியில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து ஏமாற்ற முயல்பவர்களுக்கு ஒரு படி மேல் இருப்பதற்காக செய்யப்பட்டவை என்று பிரதமர் கூறினார். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலும் ஆயிரம் முறை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளின் நலுனுக்காக பயிர் காப்பீடு போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, என்று பிரதமர் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் ஆயுதப் படையை பாராட்டிய பிரதமர், அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்காக முழுமையாக தயாராக இருப்பதாக கூறினார்.

Click here to read the full text speech