சுகாதார, துப்புரவு மற்றும் நகர மேம்பாட, வர்த்தகம் மற்றும் தொழில் துறை குறித்து பிரதமருக்கு இரண்டு குழுக்களைச் சேர்ந்த செயலாளர்கள் செயல்விளக்க ஆலோசனை

சுகாதாரம், துப்புரவு மற்றும் நகர்புற மேம்பாடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளின் ஆளுமையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு இந்திய அரசின் இரண்டு குழுக்களைச் சேர்ந்த செயலாளர்கள் செயல்விளக்க ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் நித்தி ஆயோக் அமைப்பைச் சேர்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

திட்டமிடப்பட்ட ஒன்பது செயல்முறை விளக்கங்களில், இதுவரை பல்வேறு ஆளுமை தொடர்பான ஏழு செயல்விளக்க கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.