ஓர் அரசியல்வாதிக்கு வாக்குகளை எண்ணும் நாள் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், அது தீர்ப்பு வழங்கும் நாளாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஓர் அரசியல் தலைவர், கட்சி ஆகியோரின் செயல்பாட்டைத் தீர்மானிக்கும்.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும்போது, எந்தத் தலைவரும் சுறுசுறுப்புடனும் பரபரப்புடனும் காணப்படுவது இயல்பு. பெரும்பாலும் தலைவர்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பர். கட்சித் தொண்டர்களும், உதவியாளர்களும் அரசியல்வாதியின் அறைக்குள் நுழைந்து, தேர்தல் குறித்து சுடச்சுடச் செய்திகளைப் பகிர்ந்து கொள்வர்.

ஆனால், நரேந்திர மோடி இதற்கெல்லாம் விதிவிலக்கு.

தேர்தல் முடிவு வெளியாகிக் கொண்டிருக்கும்போது, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாரா... ? இல்லை!

அவரது அறை முழுவதும் அரசியல்வாதியின் ஆட்களும், ஆதரவாளர்களும் நிரம்பியிருந்தனரா.... ? இல்லை!

பிறகு, மோடி என்னதான் செய்துகொண்டிருந்தார்?

அவர்பாட்டுக்கு தனது பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரது அன்றாடப் பணிகள் எவ்வித தொய்வும் இல்லாமல் தொடர்ந்தன.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வெற்றி வாகை சூடும் கட்சியின் பிரதமர் வேட்பாளரும் தேர்தல் பிரசாரத்தில் மையப் பிரமுகருமான நரேந்திர மோடி பிராசாரத்துக்கிடையில் தனது வழக்கமான வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். முதல் தொலைபேசி அழைப்பு கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் இருந்து வந்தது. பின்னர் மோடி தனது தாயார், மூத்த தலைவர் குஷபாவ் தாக்கரே ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

2002, 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளைப் போலவே அந்த ஆண்டும் அமைந்தது.

நாட்டின் உயரிய பதவியை தனது ஒரே குறிக்கோளாகக் கொண்டிருக்காத ஒரு மனிதருக்கு தேர்தல் முடிவு என்பது இன்னொரு நாள்தான். மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை அடக்கத்துடன் ஏற்பதே அவரது வழக்கம்.