ராணுவத்தினரின் நலனுக்காக மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு அமைந்தது முதல்  முன்னாள் படைவீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான “ஒரு பதவி நிலை ஓரு ஓய்வூதியம்” என்ற திட்டம் உள்பட ராணுவத்தினரின் பல கோரிக்கைகளை கவனித்தும், நிறைவேற்றியும் வந்திருக்கிறது. அவை முன்னாள் படைவீரர்களுக்கு நேரடியாகப் பலன் அளித்துள்ளது. 

நமது ராணுவ வீரர்களின் வெல்லமுடியாத வீரத்துக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி எப்போதும் மரியாதை அளித்து வருக்கிறார். வீரர்களின் மன உறுதியை மேம்படுத்துவதற்காக ஏராளமான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இரவு பகலாக நம் நாட்டைப் பாதுகாத்து வரும் வீர்ர்களுடன் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.திரு. மோடி கடந்த ஆண்டு தொடங்கிய “#Sandesh2Soldiers’  என்ற பிரசாரம் தொடங்கிவைத்தார். இதன்படி நாடு முழுவதும் உள்ள மக்கள் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.


கடந்த காலங்களில் படைவீரர்களுடன் பிரதமர் மோடி:

ராணுவ தினத்தையொட்டி இந்திய ராணுவத்தின் வீரம், விலைமதிப்பற்ற சேவை ஆகியவற்றைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வணங்குகிறார்.

“எல்லா வீரர்களுக்கும் வாழ்த்துகள். இந்திய ராணுவத்தின் வீரம், விலைமதிப்பற்ற சேவை ஆகியவற்றை வணங்குகிறோம்”

நாட்டைக் காப்பதாகட்டும், இயற்கைச் சீற்றத்திலிருந்து மக்களைக் காப்பதாகட்டும், இந்தியா ராணுவம் எப்போதும் முன்னிலையில் இருந்து வழிகாட்டுகிறது.

நமது ராணுவம் செய்த எல்லாத் தியாகங்ளையும் பெருமிதத்துடன் நினைவுகூர்கறோம். 125 கோடி இந்தியர்கள் அமைதியாக இருக்க ஆபத்தான நிலையில் உயிரையும் விடுகிறார்கள்” என்று பிரதமர் கூறினார்.