மக்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் 2 ஜி, நிலக்கரி ஊழல், அகஸ்டா வெஸ்ட்லண்ட் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் பற்றி குறிப்பிட்டார். ``எவ்வளவு பணம் போனது என முன்பு மக்கள் கேட்பார்கள். இப்போது எவ்வளவு பணம் திரும்பி வந்துள்ளது என கேட்கிறார்கள். இது சரியான நடவடிக்கை'' என்று கூறினார்.