Mr. Jacques Audibert, Diplomatic Advisor to the French President meets Prime Minister Modi

பிரஞ்சு அதிபரின் தூதுவர் ஆலோசகர் திரு. ஜாக் ஆடிபர்ட் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

2015 ஆம் ஆண்டு தான் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதையும் 2016 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் அதிபர் ஹோலாண்டே சிறப்பு விருந்தினராக பங்கேற்றதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். வரும் ஆண்டுகளில் நமது இருதரப்பு உறவு மேலும் வலுவடைவதற்கான அடிக்கல்லாக இந்த பயணங்கள் அமைந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

வெறும் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணு சக்தி துறைகளில் இருந்த இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் இருதரப்பு உறவு இன்று பல்வேறு துறைகளில் விரிந்து காணப்படுகிறது. முக்கியமாக பயங்கரவாத-எதிர்ப்பு, கடல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் நமது இருதரப்பு உறவு மிகவும் வலிமை அடைந்துள்ளது.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சர்வதேச முயற்சியின் முக்கிய சாதனை முயற்சியாக சர்வதேச சூரிய சக்தி உடன்பாடு நிறுவப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர் இந்த முயற்சிக்கு பிரான்ஸ் நாடு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

ஸ்மார்ட் நகரங்கள், நகர போக்குவரத்து, மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளில் சிறந்த இருதரப்பு ஒத்துழைப்பு வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.