What do you think NDA Govt’s move of banning old Rs. 500 & Rs. 1000 currency notes? Take a survey & submit your views on the NM App

500 ரூ மற்றும் 1000 ரூ நோட்டுகள் பற்றிய மத்திய அரசின் சமீபத்திய முடிவுக்கு மக்களின் கருத்தை அறிய பிரதமர் மோடி அழைப்பு.

மக்கள் நரேந்திர மோடி செயலியில் உள்ள பத்து கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் தங்கள் கருத்தை சமர்ப்பிக்கலாம். இந்த கருத்துக் கணிப்புக்கான சுட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மோடி, மக்களிடம் இருந்து நேரடியாக கருத்தை அறிந்து கொள்ள விரும்புகிறார்.

இது தொடர்பாக அவர் கேட்டுள்ள பத்து கேள்விகள் கீழ்வருமாறு:

1. இந்தியாவில் கருப்புப் பணம் உள்ளது என நினைக்கிறீர்களா? அ) ஆம். ஆ) இல்லை

2. ஊழல் பேயும், கருப்புப் பணமும் ஒழிக்கப்பட வேண்டியன என எண்ணுகிறீர்களா? அ) ஆம். ஆ) இல்லை

3. ஒட்டுமொத்தமாக கருப்புப் பண ஒழிப்பில் அரசின் அணுகுமுறை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

4. ஊழலை ஒழிக்க மோடி அரசின் முயற்சிகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 1 முதல் 5 என்ற அளவீட்டில்- மிகவும் பாராட்டத்தக்கது, மிக நன்று, நன்று, பரவாயில்லை, தேவையில்லாதது என மதிப்பளிக்கவும்.

5. 500ரூ மற்றும் 1000ரூ பழைய நோட்டுகளை ஒழிக்க மோடி அரசு எடுத்த முடிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அ.)சரியான திசையில் செல்லும் மிகச்சரியான முடிவு. ஆ.)நல்ல முடிவு இ.)எந்த பயனும் இருக்காது

6. நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும் என நினைக்கிறீர்களா? அ) உடனடியாக உதவும் ஆ.)சில காலம் சென்றோ, நாட்பட்டோ உதவும் இ.)குறைந்தபட்ச உதவிதான் இருக்கும். ஈ) தெரியவில்லை.

7. நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ரியல் எஸ்டேட், உயர்கல்வி, மருத்துவம் ஆகியன சராசரி மனிதனுக்கு எட்டும் வகையில் விலை குறையும். அ)கண்டிப்பாக ஆ)ஓரளவுக்கு இ)சொல்ல முடியாது

8. ஊழல், கருப்புப்பணம், பயங்கரவாத மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான இந்த நடவடிக்கையால் நீங்கள் அனுபவித்த அசிரத்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்களா? அ) நிச்சயம் இல்லை. ஆ)ஓரளவுக்கு. ஆனால் அது என் கடமை. இ.ஆம்

9. ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் இப்போது கருப்புப் பணம், ஊழல், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக போராடுகிறார்கள் என நம்புகிறீர்களா? அ)ஆம் ஆ)இல்லை

10. இது குறித்து ஏதேனும் ஆலோசனைகளை, எண்ணங்களை பிரதமர் மோடியுடன் பகிர நினைக்கிறீர்களா?

இந்தக் கருத்துக் கணிப்பு மக்களும் நிர்வாகத்தில் பங்கு பெற வேண்டும் என்ற பிரதமரின் நோக்கத்தின்பாலும், முக்கியமான கொள்கை முடிவுகளில் மக்களிடம் கருத்துக் கேட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின்பாலும் அமைக்கப்பட்டது.

பழைய 500ரூ மற்றும் 1000ரூ நோட்டுகள் இனி செல்லாது என்ற ஆணை குறித்து பிரதமர் நேரடியாகவும், துல்லியமாகவும் கேள்விகளை கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாது இந்த நடவடிக்கையை மேலும் எப்படி வலுப்படுத்துவது என்ற ஆலோசனைகளையும் கேட்டுள்ளார்.

இந்தக் கருத்தின் மூலம் மக்களுடன் இணைந்தே நிர்வாகம் செய்ய விரும்பும் பிரதமரின் நோக்கம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.