PM Narendra Modi addresses public meeting in Aligarh
Our aim is to make rural India smoke-free. We have launched the Ujjwala Yojana & are providing gas connections to the poor: PM
We want our farmers to prosper. We will undertake every possible measure that benefits them: PM
Uttar Pradesh does not need SCAM. It needs a BJP Government that is devoted to development, welfare of poor & elderly: PM

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் பொதுக் கூட்டம் ஒன்றில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, தமது அரசு ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிராக தொடர்ந்து போராடி வருவதாகத் தெரிவித்தார். ``2014-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஊழலை ஒழிக்க நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் & கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்று அவர் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சி அரசை சாடிய பிரதமர் மோடி, மாநிலத்தின் வளர்ச்சியில் உ.பி. அரசுக்கு அக்கறை இல்லை என்றும், மாநிலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ``அலிகார் பூட்டுகள் பிரபலமானவை. ஆனால் உ.பி. அரசின் அக்கறையின்மை காரணமாக, மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூடி பூட்டு போடப்படுகின்றன'' என்று அவர் கூறினார். ``எங்களின் குறிக்கோள் விகாஸ் - வித்யூத் (மின்சாரம்), கானூன் (சட்டம்), சடக் (சாலை இணைப்ப) '' என்று அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிப்பதற்கான திட்டங்களை தமது அரசு தொடங்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ``இளைஞர்கள் வளம் பெற்று செழிப்புற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் முத்ரா திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களுக்கு கடன்கள் கொடுத்து, தொழில்முனைவோர் நிலையை ஊக்குவித்தோம்'' என்று மோடி கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல்களுக்கு சட்டத்தைப் பற்றிய அச்சம் இல்லை என்றும் திரு. மோடி குறிப்பிட்டார். ``உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல்கள் சட்டத்துக்கு அஞ்சவில்லை. கிரிமினல்களுக்கு அடைக்கலம் தருபவர்களை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என மாநில மக்களை கேட்டுக் கொள்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டார்

கரும்பு விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் பற்றி பேசிய பிரதமர், அவர்களுடைய நிலுவைத் தொகைகள் 14 நாட்களுக்குள் வழங்கப்படும் என உறுதியளித்தார். ``கரும்பு விவசாயிகளுக்கான நலத் திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஆனால் அவர்களை உத்தரப்பிரதேச அரசு ஏன் கவனிக்கவில்லை'' என அவர் கேள்வி எழுப்பினார். ``நமது விவசாயிகள் வளம் பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் பயன்பெறுவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்'' என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, ``பாபா சாகேப் அம்பேத்கரின் சிந்தனைகளை மற்ற கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. ஆனால் நாங்கள் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்புகளை எல்லோரும் அறிய வேண்டும் என விரும்புகிறோம்'' என்று கூறினார்.

உத்தரப்பிரதேச மக்கள் SCAM எனப்படும் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு எதிராக போராட வேண்டிய தேவை வந்துள்ளது என்று திரு மோடி தெரிவித்தார். ``உத்தரப்பிரதேசத்துக்கு SCAM தேவையில்லை. வளர்ச்சி, ஏழைகள் மற்றும் முதியோரின் மேம்பாட்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ள பா.ஜ.க. அரசுதான் தேவை'' என்று அவர் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அரசை மாற்ற வேண்டும் என மக்களுக்கு திரு மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் கலந்து கொண்டனர்.