பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற குரு கோவிந்த் சிங்கின் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், குரு கோவிந்த் சிங் எப்படி பல்வேறு மக்களை எப்படி ஈர்த்தார் என்று உலகம் அறிய வேண்டும் என்று கூறினார். குரு கோவிந்த் சிங் தனது போதனைகள் மூலம் அறிவு புகட்டினார். அவரின் எண்ணங்கள் மற்றும் யோசனைகள் மூலம் பல்வேறு மக்களுக்கு ஊக்கம் அளித்தார். வீரம் தவிர்த்து, குரு கோவிந்த் சிங்கின் பல்வேறு குணங்கள் வியக்கத்தக்க வகையில் இருந்தன. சமூக பாகுபாட்டில் நம்பிக்கை இல்லாத அவர் அனைவரையும் சமமாக நடத்தினார் என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.

வரும் தலைமுறையை குடி பழக்கத்தில் இருந்து காக்க, பீகார் முதல் அமைச்சர் திரு. நிதிஷ் குமார் எடுத்துள்ள முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். நாட்டின் வளர்ச்சியில் பீகார் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

Click here to read full text speech