PM Narendra Modi address public meeting in Meerut
Our Government is trying everything possible for progress of Uttar Pradesh: PM Modi
Shri Modi attacks Congress for allying with Samajwadi party
This election is about UP’s fight against SCAM - Samajwadi Party, Congress, Akhilesh Yadav and Mayawati, says Shri Modi

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மாபெரும் பொதுக் கூட்டத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய திரு. மோடி, ``ஆங்கிலேயருக்கு எதிராக முதலாவது சுதந்திரப் போர் மீரட்டில் 1857-ல் தொடங்கியது. இப்போது வறுமைக்கு எதிரான போர் இங்கிருந்து தொடங்க வேண்டியுள்ளது'' என்று கூறினார். உத்தரப்பிரதேசத்தின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கு, மாநில அரசை மாற்ற வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மாநிலத்தின் இளைஞர்கள் பற்றி பா.ஜ.க. கவலை கொண்டுள்ளது என்றும், அவர்கள் செழிப்புறுவதற்கு வேலைவாய்ப்புகளை அளிக்க விரும்புகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். ``உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு சாத்தியமான அனைத்தையும் வழங்க எங்கள் அரசு முயற்சி செய்கிறது. நிறைய செய்யப் பட்டுள்ளது. ஆனால் வளர்ச்சியில் புதிய உச்சத்தை மாநிலம் தொடுவதற்கு அதிகம் பாடுபட நான் விரும்புகிறேன்'' என்று அவர் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரிமினல்களுக்கு சட்டத்தைப் பற்றி எந்த அச்சமும் இல்லை என திரு. மோடி குறிப்பிட்டார். ``அப்பாவி குடிமக்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்? அப்பாவி வர்த்தகர்கள் ஏன் கொல்லப் படுகிறார்கள்?'' என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டுகள் கூறிய திரு. மோடி, ``காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று உத்தரப்பிரதேசம் எவ்வாறு கொள்ளையடிக்கப் பட்டுள்ளது என்று கூறியது. சமாஜ்வாதி கட்சியையும் மாநில அரசையும் அவர்கள் குறைகூறினர். ஆனால் திடீரென என்ன நடந்ததோ, சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது'' என்று குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேசம் இப்போது `SCAM'-மிற்கு எதிராக, அதாவது சமாஜ்வாதி, காங்கிரஸ், அகிலேஷ் யாதவ், மாயாவதி -க்கு எதிராக போராட வேண்டிய காலம் என்று மோடி கூறினார். ``SCAM-மிற்கு எதிரான போராட்டம் இது. SCAM வேண்டுமா அல்லது வளர்ச்சிக்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ள பா.ஜ.க. அரசு வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். சாத்தியமான அனைத்தையும் உத்தரப்பிரதேசத்துக்கு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்று மோடி மேலும் கூறினார்.

மக்களின் சுகாதாரம் பற்றி மாநில அரசு கவனம் செலுத்தவில்லை என்றும் பிரதமர் குற்றஞ்சாட்டினார். ``சுகாதாரத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், அதைக்கூட மாநில அரசு மக்களுக்கு செலவு செய்யவில்லை. வளர்ச்சிப் பணிகளும் சுகாதார வசதியும் மக்களை சென்றடைவதைத் தடுப்பதில் என்ன அரசியல் நடந்தது?'' என்று மோடி கேள்வி எழுப்பினார்.

 

கரும்பு விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள் மற்றும், முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு பதவி நிலைக்கு ஒரு ஓய்வூதியத் திட்டம் பற்றியும் பிரதமர் பேசினார். பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றியும் திரு மோடி பேசினார். அதன் பாதிப்பை சிலர் எப்படி உணர்ந்தார்கள் என்றும் குறிப்பிட்டார். ``கொள்ளையடித்தவர்கள் இந்த முடிவை ஏற்க மாட்டார்கள், எனக்கு எதிராக கை கோர்ப்பார்கள் என்று நவம்பர் 8 ஆம் தேதி எனக்குத் தெரியும். ஆனால் ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிரான போரை நான் தொடருவேன்'' என்று மோடி கூறினார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பா.ஜ.க. தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Click here to read full text speech