Shri Narendra Modi addresses a huge rally in Badaun, Uttar Pradesh
Our Govt is devoted to serve the poor, marginalized & farmers: PM Modi
What is the reason that fruits of development could not reach this land under SP, BSP?, asks Shri Modi
Why is it that even after 70 years of independence, 18,000 villages did not have electricity? Previous goverenments must answer: PM
We eliminated interview processes for class III & IV jobs. This has reduced corruption: PM

உத்தரப்பிரதேச மாநிலம் படோனில் மாபெரும் திரளணியில் பிரதமர்  திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மக்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது, உத்தரப்பிரதேசத்தில் மாற்றம் தேவை என்பது தெளிவாகத் தெரிகிறது என மோடி கூறினார்.

முந்தைய அரசுகள் மீது குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, ``நான் குஜராத்தில் இருந்தபோதே படோன் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆட்சியின் போது, வளர்ச்சியின் பலன்கள் இந்த மக்களுக்கு கிடைக்காமல் போனதற்கு காரணம் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார்.

``ஏழைகள், விளிம்புநிலையில் உள்ளவர்கள் & விவசாயிகளுக்கு சேவை செய்வதில் எங்கள் அரசு அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அவர்களை கைதூக்கி விடுவதற்கு நாங்கள் ஏராளமான திட்டங்களை தொடங்குகிறோம்'' என்று பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் குற்றஞ்சாட்டினார். `சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், 18,000 கிராமங்களுக்கு ஏன் மின்சார வசதி தரப்படவில்லை?'' என்று அவர் கேட்டார். ``படோனில் சுமார் 500 கிராமங்களுக்கு மின்சார வசதி இல்லை. முந்தைய அரசுகள் இதுவரை என்ன செய்தன? அவர்கள் பதில் அளித்தாக வேண்டும்'' என்று பிரதமர் கூறினார்.

கிரிமினல்களிடம் இருந்து உத்தரப்பிரதேச மக்களைக் காப்பாற்ற சமாஜ்வாதி கட்சி அரசு தவறிவிட்டது என்று அவர் புகார் கூறினார். ``உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி எதற்காக கிரிமினல்களுக்கு அடைக்கலம் தருகிறது?'' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

உத்தரப்பிரதேசத்தில் 3 எம்.எல்.சி. இடங்களில் பா.ஜ.க.வை வெற்றி பெறச் செய்தமைக்காக உத்தரப்பிரதேச மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். ``பா.ஜ.க.வை ஆதரித்து, எம்.எல்.சி. தேர்தலில் எங்கள் கட்சியை வெற்றி பெற செய்தமைக்காக உத்தரப்பிரதேச மக்களை நான் பாராட்டுகிறேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஊழலைக் குறைப்பதற்காக, அரசில் கிரேடு 3 மற்றும் கிரேடு 4 தொகுப்புகளில் உள்ள பணிகளுக்கு நேர்காணல்களை ரத்து செய்வதற்கு தமது அரசு முடிவெடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். ``பிரிவு III & IV பணிகளுக்கு நேர்காணல் நடைமுறைகளை நாங்கள் ரத்து செய்தோம். இது ஊழலைக் குறைத்துள்ளது'' என்று அவர் குறிப்பிட்டார். ``அரசியல் ஆதாயங்களுக்காக, உத்தரப்பிரதச  அரசு மாநிலத்தில் உள்ள இளைஞர்களின் விருப்பங்களுடன் விளையாடிவிட்டது'' என்றும் அவர் கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு விவசாயிகளின் நலன் அதிமுக்கியமான விஷயம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பற்றி பேசிய பிரதமர், ``ஏராளமானவர்களுக்கு பயன் தரக் கூடிய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் சமாஜ்வாதி கட்சி அரசு அதை ஏன் அமல் செய்யவில்லை?'' என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் கலந்து கொண்டனர்.