Vijaya Dashami is the festival of victory of truth over falsehood; and of defeating the oppressor: PM Modi
Terrorism is the enemy of humanity: PM Modi
The forces of humanity across the world must now unite against terrorism: PM Modi
PM Modi urges people to defeat the Ravana existing in the form of corruption, illiteracy and poverty

லக்னோவில் ஐஷ்பாக் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்ற பெருந்திரளான மக்களிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று உரையாற்றினார்.

திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு தனது விஜயதசமி தின வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், பாரம்பரியமிக்க ராம்லீலா கொண்டாட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். பொய்மையை உண்மை வெற்றி கொண்ட, அடக்கியாளுவோரை தோற்கடித்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடுவதே ராம்லீலா என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வோர் ஆண்டும் நாம் ராவணனை எரிக்கும்போதும் நம்மிடம், நமது சமூக அமைப்புகளில், நமது நாட்டில் உள்ள தீயவைகளையும் சேர்த்தே நாம் அகற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு தசரா கொண்டாட்டத்தின்போதும், ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள பத்து குறைகளை அகற்றுவது என உறுதியேற்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார். இந்தத் தீமைகளை அகற்ற முயற்சி செய்வது மட்டுமின்றி அவற்றை அகற்றுவதற்கான வலிமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது என்றும் அதுவே நமது நாட்டை மகத்தானதொரு நாடாக உருவாக்கியிருக்கிறது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் எதிரி என்று குறிப்பிட்ட பிரதமர், மிகச்சிறந்த மனிதனுக்கான உதாரணமாக ஸ்ரீராமர் இருந்ததோடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் இலக்கணமாகவும் அவர் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார். ராமாயண இதிகாசத்தில் வரும் ஒரு பாத்திரமான ஜடாயு தான் பயங்கரவாதத்திற்கு எதிராக முதலில் போராடியவர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அச்சமின்மை என்பதை நமக்கு தெரிவிப்பவராக ஜடாயு இருக்கிறார் என்று குறிப்பிட்ட பிரதமர் 125 கோடி இந்தியர்களும் பயங்கர வாதத்தை எதிர்கொள்வதில் ஜடாயுவாக மாற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்தோமானால், பயங்கரவாதிகளின் சதித்திட்டங்களை மிக எளிதாக நம்மால் தடுத்து நிறுத்திவிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகம் முழுவதிலுமுள்ள மனித சக்திகள் பயங்கர வாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இத்தகைய பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிக்கின்றவர்களையும் நாம் இப்போது விட்டுவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிக்கின்றவர்களையும் நாம் இப்போது விட்டுவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Click here to read full text speech