PM Narendra Modi inaugurates National Youth Festival at Rohtak via video conferencing
Swami Vivekananda shows what one can achieve at a young age: PM
The work that the youth are doing today will impact the future of the nation: PM
Need of the hour is collectivity, connectivity, and creativity: PM Modi

ரோத்தக்கில் நடைபெற்ற தேசிய இளைஞர் விழாவில் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

சிறு வயதில் ஒருவர் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதற்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்கை எடுத்துக்காட்டாக உள்ளது. இன்றைய இளைஞர்களின் செயல்பாடு நாளைய தேசத்தின் வருங்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

இவ்விழாவின் தலைப்பு ‘டிஜிட்டல் இந்தியாவிற்கு ஆதரவாக இளைஞர்கள்’ என்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த பிரதமர், பணமற்ற பரிவர்த்தனையை மக்கள் உபயோகிக்க இளைஞர்கள் உதவ வேண்டும் என்று கூறினார். ஊழலும் கருப்பு பணமும் நமது தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் காலம் மாறிவிட்டது. கூட்டு முயற்சி, இணைப்பு, ஆக்கம் ஆகியவை இந்நேரத்தின் தேவை. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், இளைஞர்களின் பேராதரவு தேசத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை தருவதாக பிரதமர் கூறினார்.

Click here to read full text speech