பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மேதகு மால்கம் டர்ன்புல் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு மன்மீத் அலிஷர் என்பவர் படுகொலை செய்யப்பட்டதால் இந்தியாவில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலைகளையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

படுகொலை சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் திரு. டர்ன்புல், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

2017ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரியுமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு விடுத்த அழைப்பை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.