இந்தியா இன்னமும் இருளில் இருக்கும் 18000 கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்கும் லட்சிய திட்டத்தை நோக்கி நடைபோடுகிறது. மின்சார வசதி பெறாத எல்லா கிராமங்களுக்கும் அடுத்த 1000 நாட்களுக்குள் வசதி மின்வசதி பெற்றுவிடும் என தனது சுதந்திர தின உரையில் பிரதமர் அறிவித்தார். அதனால் கிராமப்பகுதிகளை மின்மயமாக்கும் வேலை அதிவேகமாக, மிகந்த வெளிப்படைத் தன்மையோடு நடந்துவருகிறது. மின்மயமாக்கப்படும் கிராமங்கள் பற்றிய தகவல்கள் செயலிகளிலும், இணையங்களிலும் கிடைக்கும். மேலோட்டமாக பார்த்தால் கிராமங்களுக்கு மின்சாரம் செல்லுவதை மட்டுமே நாம் கவனிப்போம். ஆனால் அது கனவுகளையும், லட்சியங்களையும், கிராம மக்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் சுமந்து செல்கின்றது.

 

ஜூலை 2012ல் கிட்டத்தட்ட 62 கோடி மக்களை இருளில் தள்ளிய பிரம்மாண்ட மின் தடை ஏற்பட்டதை யாரும் மறக்க முடியாது. நிலக்கரி, வாயு போன்ற எரிபொருட்கள் பற்றாக்குறையால் 24000 மெகா வாட் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கூடுதல் உற்பத்தி கொள்கைகளிலும், முதலீடுகளை பயன்படுத்தாததாலும் ஒட்டுமொத்த மின் துறையே மிகப்பெரிய தேக்கநிலையை சந்தித்தது.


தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபோது, மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரி சார் மின்சார உற்பத்தி நிலையங்களில் (மத்திய மின் வாரியத்தால் நிர்வகிக்கப்படும் 100 நிலக்கரி நிலையங்களில் 66 நிலையங்கள்) ஏழு நாட்களுக்கு தேவையான நிலக்கரியே கையிருப்பில் இருந்தது. அப்படி ஒரு மோசமான சூழலில் இருந்து மீண்டு, இன்று நாட்டில் எந்த மின்சார உற்பத்தி நிலையத்திலும் பற்றாக்குறை என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


| எல்லோருக்கும் மின்சாரம் வழங்க முயலும் அதே சமயம், சுத்தமான ஆற்றலையும் அரசு முக்கிய கொள்கையாக கொண்டுள்ளது. 175 கிகா வாட் ஆற்றலை புதுப்பிக்க முடிந்த வழிகளின் மூலம் பெற அரசு முனைந்துள்ளது. இதில் 100கிகா வாட் சூரியசக்தியில் இருந்து பெறப்படும்.

இத்துறையில் ஒட்டுமொத்த, நீண்டகால கட்டமைப்பு வளர்ச்சியையும், எல்லோருக்கும் எல்லா நேரமும் மின்சாரம் என்ற கொள்கையையும் நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது. ஆற்றல் துறையில் ஆரோக்கியம் என்பது எண்ணிக்கை வளர்ச்சியை வைத்தே கணக்கிடப்படுகிறது. தொழில் உற்பத்தி அட்டவணையின்படி (IIP) இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி ஏப்ரல்-நவம்பரில் 9% உயர்ந்தபோது மின்சார உற்பத்தி 9% வளர்ந்தது. 2015-2015 காலகட்டத்தில் இந்திய நிலக்கரி நிறுவனம் நிலக்கரி உற்பத்தியை கடந்த நான்கு ஆண்டுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியைவிட அதிகமான அளவு பெருக்கியுள்ளது. இதனால் இந்திய இறக்குமதி 49% வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது. உச்சநீதிமன்றம் 214 நிலக்கரி தொகுதிகளை ரத்து செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையை வெளிப்படையான இணைய ஏலத்தின் மூலம் நல்லதொரு வாய்ப்பாக மாற்றியதோடு, அதன் மூலம் வந்த வருமானத்தை கிழக்கிந்திய மாநிலங்களுக்கு செல்லும்படி செய்தது மத்திய அர்சு.


சென்ற ஆண்டு உற்பத்தி திறன் அதிகரிப்பை 22,566 மெகா வாட் அளவில் செய்தது வரலாறு காணாத வளர்ச்சியாகும். உச்சக்கட்ட தட்டுப்பாடு 2008-09ல் 11.9%ல் இருந்து இப்போது 3.2% என குறைந்துள்ளது. 2008-09ல் 11.1%ஆக இருந்த ஆற்றல் தட்டுப்பாடு 2.3% என இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.


விநியோகத்தை பொறுத்தவரை உற்பத்தி அதிகமிருக்கும் மாநிலங்களில் இருந்து பற்றாக்குறை மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகிப்பதில் சிக்கல் இருந்தது. இதை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தெற்கு மின் கட்டமைப்பை இணைத்து, ‘ஒரே நாடு ஒரே கட்டமைப்பு ஒரே அலைவரிசை’ என்பதாக மாறியிருக்கிறது. 2013-2014ல் 3450 மெகா வாட் ஆக இருந்த கையிருப்பு விநியோகக் கொள்ளளவை (ATC) 5900 மெகா வாட் ஆக, அதாவது 71%ஆக இந்த மாதம் உயர்ந்துள்ளது.

ஆற்றல் தொடர் வரிசையில் பலவீனமாக இருக்கும் இடங்களை பலப்படுத்த உதய் (உஜ்வால் டிஸ்காம் அஸ்யூரன்ஸ் யோஜனா) என்ற திட்டம், இந்தத் துறையில் கடந்தகால, நிகழ்கால, வருங்காலப் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்கும் வண்ணம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. உதய் திட்டம் மாநிலத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் தொடங்கி (முதல்வர், தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், டிஸ்காம் இயக்குனர்கள்) வங்கி அதிகாரிகள், ஒழுங்கு செய்பவர்கள் உட்பட பலரிடம் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டுள்ளது. டிஸ்காமின் கடன் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, தக்கவைத்துக் கொள்ளத்தக்க மேம்பட்ட செயல்முறையை டிஸ்காமிற்கு அமைத்துக் கொடுக்கிறது உதய். அதே நேரத்தில் மின்சாரத்தின் விலையை குறைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் அனைத்து டிஸ்காம்களும் 2018-19க்குள் லாபகரமாக இயங்கத்தொடங்கும். உதய் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பட்ஜெட் வரைமுறைகளால், டிஸ்காம் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதே நேரத்தில் ஒன்றிணைந்த செயல்திட்டமும், திறன் வளர்ச்சி, விலை குறைப்பு உள்ளிட்ட நோக்கங்களும் மின்துறை மேம்பாட்டிற்காக இதற்கு முன்பு போடப்பட்ட எல்லா திட்டங்களிலிருந்தும் உதயை வேறுபடுத்திக் காட்டுகிறது.

எல்.இ.டி பல்புகளின் விலை 75% குறைந்துள்ள மற்றும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 4கோடி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ள வகையில் ஆற்றல் துறை மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. அனைத்து பல்புகளையும் எல்.இ.டி பல்புகளாக மாற்றும் குறிக்கோள் நல்லமுறையில் நடந்து கொண்டிருக்கிறது. 2018க்குள் 77கோடி பல்புகள் விநியோகிக்கப்பட்டிருக்கும். தெருவிளக்கு மற்றும் உள்ளூர் தேவைகளுக்கான எல்.இ.டி பல்புகள் திட்டம் உச்சகட்ட மின்சார தேவையை 22 கிகா வாட் அளவுக்கு குறைத்து ஆண்டுக்கு 11,400கோடி யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்தும். இதன் விளைவாக கார்பன் மோனாக்சைடு வெளியீடு 8.5கோடி டன் அளவில் குறையும். 22 கிகா வாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வது பெரிய சாதனையாக போற்றப்படலாம், ஆனால் அதற்காக தனியாக முதலீடு செய்யாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலேயே அதையும் சேர்த்து செய்தது என்பது பல பரிமாணங்களில் பாராட்டத்தக்கது.

Explore More
PM Modi's reply to Motion of thanks to President’s Address in Lok Sabha

Popular Speeches

PM Modi's reply to Motion of thanks to President’s Address in Lok Sabha
Modi govt's next transformative idea, 80mn connections under Ujjwala in 100 days

Media Coverage

Modi govt's next transformative idea, 80mn connections under Ujjwala in 100 days
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister also visited the Shaheed Sthal
March 15, 2019

Prime Minister also visited the Shaheed Sthal