H.E. Mrs Nguyen Thị Kim Ngan, President of the National Assembly of Vietnam meets PM
India & Vietnam sign bilateral Agreement on Cooperation in Peaceful Uses of Atomic Energy

வியட்நாம் தேசிய நாடாளுமன்றத்தின் தலைவர் மேதகு திருமதி நிகுயென் தி கிம் நிகன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

செப்டம்பர் 2016-ல் தாம் வியட்நாம் சென்றிருந்தபோது ஹனோய் நகரில் இதற்கு முன்பு சந்தித்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். வியட்நாம் நாடாளுமன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள முதலாவது பெண்மணியான திருமதி நிகன், உலகெங்கும் உள்ள பெண்களுக்கு உத்வேகம் தரும் நபராக இருக்கிறார் என்று அவர் கூறினார்.

இந்தியா மற்றும் வியட்நாம் இடையே நாடாளுமன்ற பங்கேற்புகள் அதிகரித்திருப்பதற்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். இரு நாடுகளின் இளம் நாடாளுமன்றவாதிகள் பரிமாற்றத் திட்டங்களை ஏற்படுத்துவதற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இன்று கையெழுத்தாகும், அமைதி வழியில் அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம், இந்தியா மற்றும் வியட்நாம் இடையே பரந்த முக்கியத்துவமான பங்களிப்பை மேலும் பலப்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.