Corruption has adversely impacted the aspirations of the poor and the middle class: PM
700 Maoists surrendered after demonetization and this number is increasing: PM
Today a horizontal divide - on one side are the people of India and the Govt & on the other side are a group of political leaders: PM
India is working to correct the wrongs that have entered our society: PM
Institutions should be kept above politics; the Reserve Bank of India should not be dragged into controversy: PM

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதில் அளித்தார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து குறிப்பிடத்தக்க அளவு விவாதம் நடைபெற்றது என்றும் பல உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைக் பகிர்ந்து கொண்டனர் என்றும் பிரதமர் கூறினார். ஊழலுக்கும் கருப்பு பணத்திற்கும் எதிரான நடவடிக்கைகள் அரசியல் நடவடிக்கைகள் அல்ல என்றும் எந்த ஒரு தனிக் கட்சியையும் குறை கூறுவதற்காக ஏற்பட்டதல்ல என்றும் பிரதமர் கூறினார். ஏழைகள், நடுத்தர வகுப்பினர் ஆகியோரின் உள்ளக் கிடக்கைகளை உழல் மோசமாகப் பாதித்திருக்கிறது என்பதை அவர் வலியுறுத்தினார். ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் அமைப்பு முறைகளை ஏமாற்றுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு சுமார் 700 மாவேயிஸ்ட் தீவிரவாதிகள் சரணடைந்திருப்பதாகவும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதாகவம் பிரதமர் தெரிவித்தார். இன்றைய நிலையில் பிளவு ஏற்பட்டிருக்கிறது: அதாவது ஒரு புறம் இந்திய மக்களும் மத்திய அரசும் உள்ளது. மற்றொரு புறம் அரசியல் கட்சித் தலைவர்களின் குழு ஒன்று உள்ளது.

நமது சமுதாயத்தில் நுழைந்துள்ள தவறுகளை சரி செய்வதில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் தெரிவித்தார். செயல் முறை மாற்றங்களை நோக்கி நாம் தொடர்ச்சியாக முன்னேற வேண்டும், நமது நாட்டின் வலுவை எச்சமயத்திலும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

நிறுவனங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவையாக அமைய அனுமதிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியை சர்ச்சைகளில் இணைத்து விடக் கூடாது என்றும் பிரதமர் கூறினார்.

ஆளுகை தொடர்பான விஷயங்களில் நிறைய சாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் சாதாரண மனிதனுக்கு வலு சேர்ந்திருக்கிறது என்றும் பிரதமர் கூறினார். அரசின் மின்னணு சந்தை மூலம் அரசுக் கொள்முதல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தூய்மை பாரதம் செய்தியை முன்னெடுத்துச் சென்று அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ஊடகங்களைப் பிரதமர் பாராட்டினார். கிராமப்புறப் பகுதிகளில் கழிவறை அமைக்கும் பணிகள் உயர்ந்துள்ளன என்றார் அவர். தூய்மை என்பது பொது இயக்கமாக மாற வேண்டும் என்றும் இந்தக் குறிக்கோள் நோக்கி நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் திட்டத்தின் மூலம் நமது பண்பாடு, நாட்டின் பல்வேறு பகுதிகளின் திறன்பாடு ஆகியவற்றை அறிந்து பாராட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாகப் பிரதமர் கூறினார்.

Click here to read full text speech