பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, வெளிநாட்டு நிதியுதவி பெறும் திட்டங்களிலிருந்து சிறப்பு விலக்கு மற்றும் போலாவரம் திட்டத்தின் பாசன கூற்றிற்கு நிதியுதவி ஆகியவற்றின் மூலம் ஆந்திரபிரதேசத்திற்கு சிறப்பு நிதியுதவி நடவடிக்கைக்கு தனது ஒப்புதலை அளித்தது.
ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மத்திய அரசின் நிதியதவி அளிப்பதற்கான அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு:
i. மத்திய அரசு, ஆந்திர பிரதேச அரசிற்கு சிறப்பு நிதியுதவி நடவடிக்கைகளை அளிப்பதன் மூலம், மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் 90:10 என்ற விகிதத்தில் பகிர்ந்துக் கொண்டால், மாநில அரசு 2015-16 முதல் 2019-20 வரை பெறும் மத்திய அரசின் பங்கு கூடுதலாக இருக்கும். மாநில அரசு 2015-16 முதல் 2019-20 வரையிலான காலத்தில் கையொப்பமிட்டு செலவழித்த வெளிநாட்டு உதவி திட்டங் களின் கடன்கள் மற்றும் வட்டிகளை திரும்ப செலுத்துதலுக்கு சிறப்பு உதவி வழிவகுக்கும்.
ii. போலாவரம் திட்டத்தின் பாசனத்திற்காக மட்டும் 01.04.2014 முதல் நிலுவையில் உள்ள தொகைக்கு, அன்றைய தேதியில் பாசனத்திற்கான தொகைக்கு ஈடாக, 100% நிதியுதவி அளிக்கப்படும். மத்திய அரசின் சார்பாக ஆந்திர பிரதேச அரசு, திட்டத்தை செயல்படுத்தும். இருப்பினும், ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு, தரக்கட்டுப்பாடு, வடிவமைப்பு பிரச்சினைகள், கண்காணிப்பு, அனுமதி வழங்கல் தொடர்பான பிரச்சினைகள் போன்வற்றை ஆறு வளர்ச்சி மற்றும் கங்கை புத்துயிராக்கம், நீர் ஆதாரத் துறையின் போலாவரம் திட்ட அதிகார அமைப்பு கையாளும். போலாவரம் திட்டம் அதிகார அமைப்பு, நிதி அமைச்சகம், செலவினத் துறையின் ஆலோசனையுடன் 01.04.2014 கால அளவிலான பாசனத்திற்கான செலவினத்தை மதிப்பிடும்.
வெளிநாட்டு நிதியுதவி திட்ட கடன் திரும்ப செலுத்தல் மூலமான மூலதன செலவிற்கான இந்த உதவி, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆந்திர பிரதேச அரசிற்கு உதவுவதுடன், மாநிலத்தின் நிதி நிலையை உறுதியாக அமைப்பதுடன், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். மேலும், போலாவரம் பாசனத் திட்டத்தின் பாசனத்திற்கான மத்திய அரசின் நிதியுதவியும், மாநில அரசால் அதை செயல்படுத்தப்படுவதும், இத்திட்டத்தை விரைந்து முடிப்பதற்கு உதவுவதுடன், மாநிலத்தின் பெருமளவிலான மக்கள் பயனடையும் வகையில் பாசன வாய்ப்புகளை அதிகரிக்கும்.
பின்னனி:
இந்திய அரசு, ஆந்திர பிரதேசம் மறுசீரமைப்பு சட்டம், 2014-ன் கீழான தனது கடமைகளை நிறைவேற்றும் வண்ணம், ஏற்கனவே, 2016-17-ம் ஆண்டில் மாநிலத்திற்கு “சிறப்பு நிதியுதவி”யாக ரூ.1,976.50 கோடியை வழங்கியுள்ளது. இத்தொகை, வளஆதார பற்றாக்குறைக்காக ரூ.1,176.50 கோடி, ராயலசீமா மற்றும் வடக்கு கடற்கரை பகுதிகள் உள்ளடக்கிய 7 பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ரூ.350 கோடி மற்றும் தலைநகர் உதவிக்காக ரூ.450 கோடி கொண்டுள்ளது.
இதைத் தவிர, நீர் ஆதாரத் துறை அமைச்சகம், ஆறு வளர்ச்சி மற்றும் கங்கை புத்துயீராக்கம், நடப்பு நிதியாண்டில் போலாவரம் பாசனத் திட்டத்திற்காக ரூ.2081.54 கோடியை அளித்துள்ளது. ஆக மத்திய அரசு, மறுசீரமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு பின்பாக, ஆந்திர பிரதேச அரசிற்கு, 2014-15-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட ரூ.4,403 கோடி, ரூ.2015-16-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட ரூ.2,000 கோடி மற்றும் 2016-17-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட ரூ.4058.04 கோடி ஆகியவற்றை உள்ளடக்கி ரூ.10,461.04 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
Centre's move of special assistance measure a boon for Andhra Pradesh, would promote economic growth
Central funding of irrigation component of the Polavaram Irrigation Project to expedite completion of the project, increase irrigation prospects, benefit people