தூய்மை பாரதம் திட்டம் நாட்டு மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். தூய்மை என்ற செய்தியை பரப்பியது மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் ஊடகங்கள் ஆற்றிய பங்களிப்பை திரு. மோடி பாராட்டினார். நாட்டின் கிராமப்புறங்களில் கழிவுநீர் அகற்றல் வசதி 42 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.