ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வர்த்தக குழுவினர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். இந்தியாவில் நடைபெறும் இந்தியா ஸ்வீடன் வர்த்தக தலைவர்கள் வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்க புது தில்லி வந்துள்ள ஸ்வீடன் நாட்டின் தலைமை செயல் அலுவலர்கள் சிலர் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.
நல்லெண்ணக் குழுவினரை பிரதமர் வரவேற்றார். ஸ்வீடன் தயாரிப்பாளர்களுக்கு நீண்டகால அடிப்படையில் வர்த்தக வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன. பாதுகாப்புத் துறை தயாரிப்புகள் மற்றும் சூரிய சக்தி போன்றவை இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டன.