கல்வி மற்றும் நெருக்கடி மேலாண்மை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இந்திய அரசின் இரண்டு குழுக்களைச் சேர்ந்த செயலாளர்கள் செயல்விளக்க ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் நித்தி ஆயோக் அமைப்பைச் சேர்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தோடு, பல்வேறு ஆளுமை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்பது செயல்விளக்க கூட்டங்களும் நிறைவுபெற்றுள்ளன.
இந்த கூட்டங்களின் நிறைவு விழாவில் பேசிய பிரதமர், மத்திய அரசு புதிய யோசனைகளை பெரிதாக வரவேற்க காத்திருக்கிறது என்பதை வலியுறுத்தினார். திட்டங்களின் நல்விளைவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து சிந்தனை செய்யுமாறு அனைத்து செயலாளர்களையும் கேட்டுக்கொண்டார்.
Groups of Secretaries to the Government of India, today presented ideas on Education and Crisis Management to PM Modi