மக்களவையில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீன கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின்கீழ், சாலைகள் எந்த அளவுக்கு வேகமாக அமைக்கப் படுகின்றன என பிரதமர் மோடி விளக்கினார். ``முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையில், பிரதம மந்திரி ஊரக சாலைகள் திட்டத்தில் 69 கிலோ மீட்டர் சாலைகள் மட்டுமே போடப்பட்டன. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் 111 கிலோ மீட்டர் சாலைகள் அமைத்தோம். அதை கண்காணிக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம்.
.”