குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து மக்களவையில் பேசிய பிரதமர் திரு. மோடி, லட்சிய நோக்கத்துடன் இந்தியாவின் கிராமப் பகுதிகளை கண்ணாடி ஒளியிழை நெட்வொர்க் மூலம் இணைக்கும் வேலையை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ``2011 முதல் 2014 வரையில், தேசிய கண்ணாடி ஒளியிழை வலையமைப்புத் திட்டத்தின் கீழ், 59 கிராமங்கள் மட்டுமே பயன் பெற்றன. ஆனால் அதுவும்கூட இறுதிநிலை பயனாளர் வரை சென்றடையவில்லை. கொள்முதலும் முழுமையாக மையப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் 2014-ல் நாம் அரசு அமைத்த பிறகு நிலைமை மாறியது. கொள்முதலை நாம் பரவலாக்கினோம். மேலும், இன்றைக்கு கண்ணாடி ஒளியிழை வலையமைப்பு நாடு முழுக்க எழுபத்தி ஆறாயிரம் கிராமங்களை அடைந்து, இறுதிநிலை பயனாளருக்கும் இணைப்பு கிடைத்துள்ளது'' என்று திரு மோடி கூறினார்.