உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் திரளணி ஒன்றில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, மாநிலத்தில் நடைபெறும் சமாஜ்வாதி கட்சியின் அரசை சாடினார். ``உத்தரப்பிரதேசத்தில் குற்றங்களின் விகிதம் அதிகரித்துள்ளது. பெண்கள் துன்புறுத்தப்படும் நிகழ்வுகள் மாநிலத்தில் அதிகரித்துள்ளது. சிறைகளில் இருக்கும் கிரிமினல்கள், அங்கிருந்தே தங்களது கோஷ்டிகளை இயக்குகிறார்கள். இந்தக் கோஷ்டியினர் மக்களை கொலை செய்கின்றனர், கற்பழிப்புகளில் ஈடுபடுகின்றனர், கடத்தல் மற்றும் கலவரங்களில் ஈடுபடுகின்றனர்'' என்று அவர் கூறினார். முதலமைச்சரை குற்றம் சாட்டிய அவர், `` உங்கள் சாதனைகள் பேசுகின்றனவா அல்லது உங்களது தவறுகள் பேசுகின்றனவா?.'' என்று கேட்டார்.