பிஜ்னோரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திரு நரேந்திர மோடி, மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் விவசாயிகளின் நலன் பற்றி சிந்தித்தது என்றும், உரங்களின் விலைகளைக் குறைத்தது என்றும் கூறினார். ``சவுத்ரி சரண்சிங் இருந்த காலத்தில், உரங்களின் விலைகளைக் குறைத்தார். அவருடைய செயலால் உத்வேகம் பெற்று விவசாயிகளின் நலனுக்கு அதிமுக்கியத்துவம் அளித்து, உரங்களின் விலைகளைக் குறைக்க நாங்கள் நடவடிக்கைகள் எடுத்தோம். இதுபோன்ற நடவடிக்கையை வேறு எந்தக் கட்சியும் எடுத்ததில்லை'' என்றும் மோடி கூறினார்.

வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், விவசாயிகள் நலனுக்கான சவுத்ரி சரண்சிங் விவசாயி நல நிதியம் உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜ.க. அரசால் உருவாக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.