தூய்மை கங்கை

Published By : Admin | January 1, 2016 | 01:01 IST

அன்னை கங்கையை தூய்மை படுத்தும் பணியை மேற்கொள்வதில் நான் பேருவகை கொள்கிறேன். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தில் கங்கை நதிக்கரையோரம் பேசுகையில் கூறிய வாசகம் தான் இது.

கங்கை நதி அதன் புனிதத்தினாலும், கலாச்சார மகிமைக்காகவும் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை, இந்த நதி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு வாழ்வளிப்பதாலும் அது முக்கியத்துவம் பெற்றதாகிறது .2014ம் ஆண்டு நியூயார்க்கில் மாடிசன் சதுக்கத் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாம் கங்கையை சுத்தப்படுத்தினால் அது 40 சதவீத இந்திய மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறினார். எனவே கங்கையை சுத்தப்படுத்தும் பணியும் ஒரு முக்கியமான பொருளாதார நிகழ்ச்சி தான்.

பிரதமரின் இந்த கூற்றை நனவாக்கும் வகையில் இந்திய அரசு கங்கையை சுத்தப்படுத்தி மாசுகளை அகற்றும் பெரும் திட்டமான நமாமி கங்கை திட்டத்தை அறிவித்துள்ளது. 2019-20ம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 100 சதவீதம் மத்திய அரசின் திட்டம் ஆகும்.

கங்கையை புனரமைப்பதில் பல்துறை சார்ந்த சவால்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய மாநில அரசுகளின் அதிகரிக்கப்பட்ட கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆரம்பகட்ட பணிகள், இடைநிலை பணிகள், நீண்டகால பணிகள் என்று பிரிக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அதாவது உடனடியாக பார்த்ததும் மாற்றத்தை ஏற்படுத்துதல், பின்னர் 5 ஆண்டு காலத்தில் முடிக்கும் பணிகளை நிறைவு செய்தல், தொடர்ந்து 10 ஆண்டுக்கு நீண்டகால பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்

இதில் தொடக்க நிலை பணிகளில்,முதல்கட்டமாக நதியின் மேற்பகுதி சுத்தப்படுத்தப்படும்,அதாவது நீரின் மேற்பரப்பில் காணப்படும் மிதக்கும் கழிவுகள், ஊரகபகுதிகளில் இருந்து கலக்கும் கழிவுகள், மாசுகளை அகற்றும் பணிகள், மேற்கொள்ளப்படும்.இதற்காக ஊரகப்பகுதிகளில் ஆற்றோர கிராம மக்களுக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்படும், தொடர்ந்து கழிவுநீர் சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டு அவை சுத்திகரிக்கப்படும். அடுத்ததாக கங்கையில் எரிக்கப்படாத, அல்லது பாதி எரிக்கப்பட்ட பிணங்கள் வீசுவதை தடுக்க அதன் கரையோரங்களில் நவீன முறையிலான சுடுகாடுகள் அமைக்கப்படும். நதியுடனான இணைப்பு கால்வாய்கள் நவீனப்படுத்தப்பட்டு அதன் மூலம் கழிவுகள் கலப்பது தடுக்கப்படும்.

மத்திய கால திட்டத்தின் கீழ், நகராட்சி மற்றும் ஆலைக்கழிவுகள் கங்கையில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி கழிவுகள் நதியில் கலப்பதை தடுக்க ஆற்றுக்கரையோரங்களில் தினமும் 2 ஆயிரத்து 500 லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் அமைக்கப்படும். இந்த திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் சிறப்பாக செயல்பட ஏதுவாக நிதி ஆதாரத்திற்கு வகை செய்யும் நிதித்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். தனியார், அரசு துறை பங்களிப்பு முறையில் இதற்கான நவீன திட்டங்கள் செயல் வடிவமாக்குவது பற்றி மத்திய அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், சலுகைகளுடன் நகர்புறங்களில் நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சொத்துக்கள் நீண்டகால நீடித்தபயன்பாட்டிற்கு வழிவகை காணப்படும்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை பொறுத்தவரை அவற்றை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகளை சட்டங்கள் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கங்கை நதிக்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படவேண்டும் என்றும், மாசு ஏற்படுத்தும் கழிவுகள் துளி அளவு கூட ஆற்றில் கலக்காமல் நிறுவனங்கள் கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகளை மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள் இப்போதே எடுக்க ஆரம்பித்துவிட்டன. இதற்கான காலவரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன்படி அனைத்து தொழிற்சாலைகளும் கழிவுகள் கண்காணிப்பு வசதியை ஆன்லைன் மூலம் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.

இதுதவிர, பல்லுயிர் பாதுகாப்பு, காடு வளர்ப்பு, நீர்தர கண்காணிப்பு போன்ற திட்டங்களும் செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படும். அடையாளச் சின்ன உயிரினங்களான தங்க பெளிமீன், டால்பின், நன்னீர் முதலை, ஆமைகள், நீர் நாய்கள் உள்ளிட்டவற்றை காக்கவும் இதில் சிறப்புத்திட்டம் உண்டு. இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன.

தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் ஏக்கரில் காடு வளர்க்கும் திட்டமும் அடங்கும். இதன் மூலம் நீர்தேங்கும் அளவு அதிகரிப்பதுடன் மண் அரிப்பும் தடுக்கப்படும், நதி நீர் சுற்றுச்சூழலும் மேம்படும். காடுவளர்ப்புத் திட்டம் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர நதிநீர் தரம் குறித்து ஆய்வு செய்ய 113 நீர் தர ஆய்வு மையங்களும் அமைக்கப்படும்.

இந்த நீண்டகால திட்டத்தின் கீழ் ஆற்றில் தொடர்ச்சியாக சீரான நீர் வரத்துக்கும் வழிவகை செய்யப்படும். பாசனத்திற்கும் பயன்படும்.

கங்கை நதி சமூக, பொருளாதார, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதனை தூய்மை படுத்தும் பணி சற்று சிக்கலான விவகாரமாகும். மேலும் பல்வேறு பயன்பாடுகளில் நதி சுரண்டலுக்கு ஆளாகிறது. எனவே இப்படி ஒரு சிக்கலான பணி உலகின் எந்த பகுதியிலும் மேற்கொள்ள முடியாததாகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமுதாயத்தினரும் இதற்கு ஆதரவு தந்தால்தான் திட்டம் செயல்வடிவம் பெறும்.

  1. ஆகவே கங்கையை தூய்மைப் படுத்தும் இந்த மகா திட்டத்தில் ஒவ்வொருவரும் ஒருவகையில் பங்களிப்பை செய்ய வேண்டும்.
    1) நிதிப் பங்களிப்பு அதிக நீளமும் கரையோர மக்கள் வளமும் கொண்ட கங்கையின் நீரை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு நிதி தேவை என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு பெரும் நிதி தேவைப்படும். இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு 4 மடங்கு உயர்த்தி விட்டது. ஆனாலும், தேவைக்குறிய நிதி கிடைக்காது. அதற்கான தூய்மை கங்கை திட்ட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் நிதி பங்களிப்பு செய்யலாம்.
    2) குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மீட்டல்- பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மற்றும் வீடுகளில் வெளியேற்றப்படும் பயன்படுத்திய தண்ணீரை ஆற்றில் கலக்கிறது. அதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நம்மில் பலரும் தெரிந்திருக்கவில்லை. இதற்காக கழிவுநீர் கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதற்கு ஏதுவாக குடிமக்கள் நீர் பயன்பாட்டை குறைத்து, கழிவுகளை குறைக்க வேண்டும். இதற்கு மறு பயன்பாடு மற்றும் மீட்டல் தொழில்நுட்பம் உதவும். கரிமக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக்குகள் இத்திட்டத்தின் கீழ் சீரமைக்கலாம்.


நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மறுவடிவமாகவும், நமது நாகரீகத்தின் அடையாளமுமாக விளங்கும் தேசிய நதியான கங்கையை பாதுகாக்கும் திட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்!

 

Explore More
PM Modi's reply to Motion of thanks to President’s Address in Lok Sabha

Popular Speeches

PM Modi's reply to Motion of thanks to President’s Address in Lok Sabha
Modi govt's next transformative idea, 80mn connections under Ujjwala in 100 days

Media Coverage

Modi govt's next transformative idea, 80mn connections under Ujjwala in 100 days
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister also visited the Shaheed Sthal
March 15, 2019

Prime Minister also visited the Shaheed Sthal