1960, மே, 1 அன்று குஜராத் உருவாக்கப்பட துவக்கத்தில் இருந்த உற்சாகம் மற்றும் நம்பிக்கை பத்தாண்டுகளின் முடிவின்போது தணிந்துபோனது. விரைவான சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றம் ஆகிய கனவுகளை கொண்டிருந்த குஜராத்தில் உள்ள சாதாரண மக்களிடையே ஏமாற்றமே ஏற்பட்டது. இந்துலால் யாக்னிக், ஜிவ்ராஜ் மேத்தா மற்றும் பல்வந்த் ராய் மேத்தா போன்ற அரசியல் புள்ளிகளின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள், அரசியலில் பணம் மற்றும் அதிகாரத்தின் மீதான மோகத்தால் மறைந்து போனது. 1960-களின் முடிவு மற்றும் 1970-களின் துவக்கதில், குஜராத்தில் இருந்த காங்கிரஸ் அரசின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் புதிய உச்சத்தை எட்டியது. 1971-ல் இந்தியா பாகிஸ்தானை போரில் வென்று, ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக உறுதியளித்தன்பேரில் காங்கிரஸ் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வாக்குறுதி, ‘வறுமை ஒழிப்பு” என்பதிலிருந்து ‘ஏழை ஒழிப்பு”-ஆக மெல்ல மாறியது. குஜராத்தில், ஏழைகளின் வாழ்க்கை மிகவும் மோசமானதுடன், கடும் வறட்சி மற்றும் கடும் விலையேற்றம் ஆகியவையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாநிலத்தில் அடிப்படை பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் காட்சி பொதுவாகி போனது. பொது மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை

.

தீர்வு காண்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளாத காங்கிரஸ் அரசு, கோஷ்டி பூசல்களில் மூழ்கி போய், இந்நிலையை மாற்றிட எந்த விருப்பத்தையும் வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக, திரு.கியான் ஷியாம் ஓசாவின் அரசு கவிழ்க்கப்பட்டு, குழப்பமான சூழ்நிலையில் திரு.சிமன்பாய் பட்டேல் அரசு பதவியேற்றது. எனினும், இந்த அரசும் நிகரான திறமையற்றதாக நிருபிக்கப்பட்டதால், குஜராத் மக்களிடையே அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி, 1973, டிசம்பரில், மோர்பி பொறியியல் கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் தங்களது உணவு கட்டணம் உயர்ந்ததை எதிர்த்து போராட்டம் நடத்தியதன் மூலம் பொதுவான கோபமாக மாறியது. இந்த போராட்டங்கள் பெருத்த ஆதரவை பெற்று, அரசிற்கு எதிரான மிகப்பெரிய இயக்கமாக மாற தூண்டியது.   மாநில மற்றும் மத்திய அரசுகள், தாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளாலும் இந்த அதிருப்தியை போக்க இயலவில்லை. ஊழல் மற்றும் விலை உயர்விற்கு எதிரான பெரும் போராட்டமாக இருந்த நிலையில், குஜராத் கல்வி அமைச்சர் இதற்காக ஜன் சங்கத்தை குற்றம் சாட்டியதால், நிலைமை மிகவும் மோசமடைந்தது. 1973-ல் திரு. நரேந்திர மோடி, சமூக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வத்தை காட்டியதுடன், பொதுமக்களை பாதிக்கக்கூடிய விலையேற்றம், பணவீக்கம் மற்றும் இதர பிரச்சினைகளுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். இளம் பிரசாரகர் மற்றும் அகில பாரதிய மாணவர் அமைப்பின் உறுப்பினரான திரு.நரேந்திரர் புனரமைப்பு இயக்கத்தில் இணைத்து தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றினார். சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்கள் ஒரே குரலில் பங்கேற்றதன் மூலம் புனரமைப்பு இயக்கம் எல்லா விதத்திலும் மிகப் பெரிய இயக்கமாக இருந்தது. இந்த இயக்கம், பொதுமக்களின் நன் மதிப்பிற்கு உரியவரும், ஊழலுக்கு எதிராக போராடுபவருமான திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் ஆதரவை பெற்றதன் மூலம் மேலும் வலுப்பெற்றது. அகமாதாபாத்தில் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் இருந்ததால், திரு.நரேந்திரர் அப்புகழ்பெற்ற தலைவருடன் நெருங்கி பழகும் உயரிய வாய்ப்பை பெற்றார். அந்த முதுபெரும் தலைவருடன் நடத்திய பேச்சுக்கள் இளம் நரேந்திரரிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புனரமைப்பு இயக்கம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதோடு திரு. சிமன்பாய் பட்டேல் பதவியேற்ற ஆறு மாத காலத்திலேயே ராஜினாமா செய்தார். புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ் அரசு அகற்றப்பட்டது. முரண்பாடாக, 1975, ஜுன், 12 அன்று குஜராத் தேர்தல் வெளிவந்த அன்றை தினத்திலேயே, அலகாபாத் உயர்நீதி மன்றம், பிரதமர் இந்திரா காந்தியை தேர்தல் ஊழல் குற்றவாளி என அறிவித்ததன் மூலம் பிரதம மந்திரியான அவரது எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கியது. ஒரு வாரத்திற்கு பின்பு, திரு.பாபுபாய் ஜஷ்பாய் பட்டேல் தலைமையில் குஜராத்தில் புதிய அரசு அமைக்கப்பட்டது. திரு.நரேந்திரருக்கு முதல் மிகப் பெரிய போராட்டமாக புனரமைப்பு இயக்கமானதுடன், அவருக்கு சமூக பிரச்சினைகள் குறித்த உலகப் பார்வைக்கு வழிவகுத்தது. இது, திரு.நரேந்திரருக்கு, அரசியல் வரலாற்றில், 1975-ம் ஆண்டு குஜராத்தில், லோக் சங்கர்ஷ் சமித்தியின் பொது செயலாளராக பதவியையும் அளித்தது. இயக்கத்தின்போது, குறிப்பாக, மாணவர்களின் பிரச்சினையை அருகிலிருந்து உணரும் வாய்ப்பை பெற்றது, அவர் முதலமைச்சர் ஆனபோது அவருக்கு மிகப் பெரிய சொத்தாக அது அமைந்ததை நிருபித்தது. 2001 முதல், அவர் கல்வி சீர்திருத்தத்தில் தனது முக்கிய கவனத்தை செலுத்தி, குஜராத் இளைஞர்கள் உலகத்தரமான கல்வியை பெற வைத்தது. குஜராத்தில், புனரமைப்பு இயக்கத்திற்கு பின்பான நம்பிக்கை குறுகிய காலம் மட்டுமே இருந்தது. 1975, ஜுன் 25 நடுஇரவில், பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி பொது உரிமைகளை ரத்து செய்யும் வகையிலும், கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையிலும் அவசர சட்டத்தை அறிவித்தார். திரு.நரேந்திர மோடியின் வாழ்க்கையில் முக்கிய அத்தியாயம் துவங்கியது