மாநிலங்களவையில் உரையாற்றிய திரு. நரேந்திர மோடி, கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக முதல்முறையாக அடிநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஊழலை தோற்கடிக்க நாடு முழுக்க மக்கள் கைக்கோர்த்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். ``அடிமட்ட நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தெளிவான தனித்துவம் ஏற்பட்டுள்ளது. கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க அவர்கள் முன்வந்துள்ளனர்'' என்று மோடி கூறினார்.