2016 ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி மற்றும் ஸ்த்ரீ சக்தி போன்ற பெண் சக்தி விருது பெற்ற பெண் சாதனையாளர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புது தில்லியில் சந்தித்து உரையாடினார்.
தனிப்பட்ட முறையிலும் அந்தந்த துறையில் புதிய வழிகாட்டும் வகையிலும் அவர்கள் செய்த முன்னோடி சாதனைகளை பிரதமர் அப்போது பாராட்டினார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் வளர்ச்சி எட்டு சதவிதமாக பதிவு செய்யப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா உலகிலேயே மிக வளர்ந்த நாடாக மாறிவிடும் என்று பிரதமர் கூறினார். பெண்கள் அதற்கேற்றார் போல் திறன் கொண்டிருக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் நமது இந்த இலக்கை அடைய பெரிதும் பங்காற்றுவார்கள் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மகப்பேறு விடுப்பு மசோதா, ஊதியத்துடனான மகப்பேறு விடுப்பை 12 வாரத்தில் இருந்து 26 வாரமாக உயர்த்த உதவும் என்று குறிப்பிட்டார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் திருமதி. மேனகா காந்தியும் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தார்.