Passage of Maternity Benefit Amendment Bill in Lok Sabha a landmark moment in our efforts towards women-led development: PM
Maternity Benefit Amendment Bill ensures better health & wellbeing of the mother & child. Increase in maternity leave is a welcome provision: PM

மகப்பேறு பயன்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, மகளிரை முன்னிலைப்படுத்திய வளர்ச்சிக்கான முயற்சிகளில் இது குறிப்பிடத்தக்க தருணம் என்று கூறியுள்ளார்.

“மகப்பேறு பயன்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது மகளிரை முன்னிலைப்படுத்தும் வளர்ச்சிக்கான நமது முயற்சிகளில் குறிப்பிடத்தக்க தருணம்.

மகப்பேறு பயன்கள் திருத்த மசோதா தாய் மற்றும் சேய் ஆகியோரின் சிறந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்கிறது. மகப்பேறு விடுமுறை அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம்.

மகளிரின் வேலையை பாதுகாக்கும் மகப்பேறு பயன்கள் திருத்த மசோதாவுக்கு நன்றிகள். அலுவலகங்களில் குழந்தைகள் காப்பகம் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.