PM Modi attends a book release function on the occasion of Constitution Day
The common citizen of India has become a soldier against corruption and black money: PM
26th November to be observed as Constitution Day to celebrate the Constitution & have greater awareness among the youth: PM

அரசியல் அமைப்புச் சட்டம் நாள் கடைபிடிக்கப்படுவதைக் குறிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற துணைக் கட்டிடத்தில் நூல் ஒன்றை வெளியிட்டார்.

“இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு” மற்றும் “அரசியல் அமைப்புச் சட்டம் – உருவாக்கம்” என்ற இரு நூல்கள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

2015 – ம் ஆண்டு முதல் நவம்பர் 26 –ம் தேதி அரசியல் அமைப்பு சட்டம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. வரும் சந்ததியினர் அரசியல் அமைப்பு சட்டம் குறித்த எல்லா தகவல்களையும் அறிந்து, அதனை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் இந்நிகழ்ச்சியின் போது கூறினார்.

அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து நினைவு கூறும் போதெல்லாம் பாபா சாகிப் அம்பேத்கரையும் நினைவு கூறுகிறோம். பாபா சாகிப் அம்பேத்கர் கூறியது போல, நாம் அரசியல் அமைப்புச் சட்டத்துடன் ஒருங்கிணைந்து, உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையே நடு நிலையை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், நவம்பர் 26 – ம் தேதி இன்றி ஜனவரி 26 – ம் தேதியை (குடியரசு தினம்) கொண்டாட வாய்ப்பு அமைந்திருக்காது என்று கூறினார்.

ஊழல் மற்றும் கருப்பு பணம் ஒழிப்பில் சாதாரண குடிமகன் கூட வீரனாக போர்தொடுத்து வருகிறார் என்று பிரதமர் கூறினார். வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க, முடிந்த வரையில் பணப்பரிமாற்றத்திற்கு மின்னணு முறைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொருவரும் தங்களின் பணத்தை செலவழிக்க எல்லா உரிமைகளும் உண்டு. ஒருவர் பணத்தை வேறு ஒருவர் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் பிரதமர் கூறினார்.

— PMO India (@PMOIndia) November 25, 2016

Click here to read full text speech