PM releases the book “Judicial Reforms – Recent Global Trends"
India has to keep pace with changing technology, and the new, interdependent global order: PM
India has opportunity to play a key global role & must adapt fast to the rapid changes, through framing of appropriate policies: PM

நீதிச் சீர்திருத்தங்கள் – சமீபத்திய உலகளாவிய போக்குகள் என்ற பொருளிலான (“ஜுடிசியஸ் ரிபார்ம்ஸ் – ரீசன்ட் குளோபல் டிரெண்ட்ஸ்") நூலை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அதன் முதல் பிரதியை குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மாறிவரும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி சர்வதேச நிலைமைக்கேற்றார் போல் உலக அளவில் ஒருவரையொருவர் சார்ந்து இயங்கும் திறனை இந்தியா பெற வேண்டும். சர்வதேச அளவில் முக்கியப் பங்கு வகிப்பதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதற்கு விரைவாக மாறிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியா தன்னை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். சிறந்த கொள்கைகள் மூலம் இதனை செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

ஒரு நாளைக்கு ஒரு சட்டத்தை நீக்குவேன் என்று தான் கூறியதை நினைவு கூர்ந்த பிரதமர் இன்று வரை மத்திய அரசு 1200 சட்டங்களை நீக்கியுள்ளது என்று கூறினார். சிறந்த அரசாட்சி முறை, நீதித்துறையின் சுமையை குறைக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.