கணிணி முறை சார்ந்த “சாதகமான ஆட்சி முறை மற்றும் சரியான நேரத்தில் அமலாக்கம்” (பிரகதி) திட்டத்தின் மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐந்தாவது முறையாகத் தலைமை ஏற்றுக் கலந்துரையாடினார்.
அஞ்சல் நிலையங்கள் குறித்தக் குறைகளைப் பற்றி பிரதமர் தனது கவலையை இன்று தெரிவித்தனர். சமுதாயத்தின் ஏழை மக்களுக்கு தபால் சேவைகள் மிக இன்றியமையாதது என்று குறிப்பிட்ட பிரதமர் அஞ்சல் துறையின் சேவைகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் குறித்து உத்தரவிட்டார். குறிப்பாக, அஞ்சல் சேமிப்புக் கணக்குகள், காப்பீடு வசதிகள், அஞ்சல் மூலம் பணம் செலுத்துதல் ஆகியவற்றின் சேவைகள் மேம்படுத்தப்படும் என்று கூறினார். அஞ்சல்களை உரியவருக்கு சேர்ப்பதில் காலதாமதம் கூடாது என்றும் தெரிவித்தார்.
ரயில்வே, சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு துறைகளிலும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள், ஆகியவற்றின் திட்ட வளர்ச்சி குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரகண்ட், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் மேற்குப் பகுதியில் சரக்கு வளாகம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்த பிரதமர், இத்திட்டப் பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இடதுசாரி தீவிரவாதம் அதிகமாக பாதித்தப்பட்டுள்ள பகுதிகளில் அலைபேசி சேவைத் திட்டம் பற்றியும் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆய்வு செய்தார். அலைபேசி இணைப்பு மூலம் தொடர்பு கொள்வது என்பது சாதாரண மனிதனுக்கும் மிக அத்தியாவசியமானது என்றும் குறிப்பாக, பிற்பட்ட பகுதிகளில், மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று இத்திட்டத்தைச் செயல்படுத்தும் மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார்.
குற்றங்கள் குறித்தும் அக்குற்றங்களை கண்டுபிடிப்பது குறித்தும் உள்ள திட்டம் பற்றி, அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் காவல்நிலையங்கள் மூலம் நேரடி காணொளி காட்சி மூலம் பிரதமருக்கு விளக்கப்பட்டது. நாட்டில் திட்டங்கள் மிக விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அப்போது கூறினார்.